முன்னாள் முதலமைச்சர், தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திரு. P.பாலகிருஷ்ண ரெட்டி அவர்களின் வழிகாட்டுதலின் படி
ஓசூர் மாநகர வடக்கு பகுதி அதிமுக கழகச் செயலாளரும், ஓசூர் மாநகர நகரமைப்பு குழு தலைவரும் 1-வது வார்டு மாமன்ற உறுப்பினருமான திரு. M. அசோகா அவர்களின் தலைமையிலும்,

ஓசூர் மாநகர அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர், கல்வி அமைப்புக்குழு தலைவர், 2-வது வார்டு மாமன்ற உறுப்பினர் திரு.H. ஸ்ரீதர் அவர்களின் தலைமையிலும்,
கிருஷ்ணகிரி மாவட்ட அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் திருJ. M. ஸ்ரீனிவாசன் அவர்களும் தலைமையேற்று
புரட்சித் தலைவர் டாக்டர் எம் ஜி ஆர் அவர்களின் 108 வது பிறந்த நாளை முன்னிட்டு கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் ஓசூர் மாநகராட்சி வடக்கு பகுதி ஜூஜூவாடியில் 17-01-2025 அன்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தி, கேக் வெட்டியும், பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கியும், வருகின்ற 2026 ஆம் ஆண்டு நடைபெறும் பொதுத் தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற அயராது உழைப்போம் என கழகத் தொண்டர்களும், பொதுமக்களும் உறுதிமொழி ஏற்று விழாவினை சிறப்பித்தனர்.
இவ்விழாவில் ஜூஜூவாடி முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ஆனந்த் ரெட்டி, வட்டச் செயலாளர் நாகிரெட்டி, ஓசூர் மாநகர அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் V.ராஜா வாசு, அவைத் தலைவர்கள் திரு. லக்ஷ்மண பாபு, திரு.தனசேகரன், மேலவை அமைப்பு பிரதிநிதி சந்திரசேகர், பொருளாளர் சந்திரமோகன், தகவல் தொழில்நுட்ப பிரிவு பொறுப்பாளர் மாதேஷ், செயற்குழு உறுப்பினர்கள் ராஜப்பா, மஞ்சுநாத், அன்பரசன், குமரேசன், அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் குமார், ரமேஷ் (MGR), பிரகாஷ், ரவி, சங்கர், கழக பிரமுகர் பெரியசாமி, மகளிர் அணியினர்,கழக முன்னோடிகள், கழகத் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டு டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் பிறந்தநாளை சிறப்புடன் கொண்டாடினர்.
ஜி.பி மார்க்ஸ்
செய்தியாளர் ஓசூர்