அரியலூர் நகர் முழுவதும் காணப்பட்ட போஸ்டர்களால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பையும், பொதுமக்களிடையே சுவராஸ்யமும் ஏற்பட்டுள்ளது. ஆட்சி அதிகாரத்தில் அதிமுக இருந்த போது சுகபோகங்களை அனுபவித்துவிட்டு சோதனையான காலகட்டத்தில் அதிமுகவை விட்டு கட்சிதாவும் அரசியல்வாதிகளுக்கு கொட்டு வைக்கும் விதமாக அச்சிடப்பட்ட அந்த போஸ்டர்களில் மறைந்த முன்னாள் முதல்வரும் அதிமுகவின் நிறுவனருமான புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் கையில் சாட்டையை வைத்துக்கொண்டு கோபமாக நிற்பது போன்ற புகைப்படம் இடம்பெற்று
அதன் கீழே, எம்.ஜி.ஆரின் புகழ்பெற்ற பாடல் வரிகளான

சிலர் ஆசைக்கும் தேவைக்கும், வாழ்வுக்கும் வசதிக்கும்
ஊரார் கால் பிடிப்பார்…
ஒரு மானமில்லை, அதில் ஈனமில்லை…
அவர் எப்போதும் வால் பிடிப்பார்…
எதிர் காலம் வரும், என கடமை வரும்!
இந்த கூட்டத்தையும் ஆட்டத்தையும்
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்,
புரட்சித் தலைவி அம்மா ஆத்மா அழிக்கும்…
என்று வசனங்கள் இடம் பெற்றிருந்தது குறிப்பிடதக்கது இது குறித்து அரசியல் நோக்கம் ஒருவர் கூறும்போது;

சமீபத்தில் அதிமுகவில் இருந்து த வெ க வில் இணையும் நபர்களை விமர்சிக்கும் விதமாக இப்போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருப்பதாக கருதுகிறார்கள். கொள்கை கோட்பாடு என்பதெல்லாம் அந்தகால அரசியல், ஆளும்கட்சியில் பயணிப்பதே இந்த கால அரசியல் கொள்கையாக மாறிவிட்டது அரசியலில் இதெல்லாம் சகஜம் தானே….என்றார். அரசியல் களத்தில் சோர்வடைந்திருக்கும் அதிமுக தொண்டர்களுக்கு நிச்சயம் இந்த போஸ்டர்கள் எனர்ஜி பூஸ்ட்டை உருவாக்கும்.
எம்.எஸ்.மதுக்குமார்.

