எஸ் டி பி ஐ கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட சமூக ஊடக அணியின் மாவட்டச் செயலாளராக இருந்து வந்த புதுபட்டினத்தை சார்ந்த MSD.முகமது சுல்தான் அவர்கள் அந்த பொறுப்பில் இருந்து விலகி விடுதலை சிறுத்தை கட்சியின் சேதுபாவாசத்திர ஒன்றிய செயலாளர் முருகேசன், முன்னாள் தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் அரச மாணிக்கம் மற்றும் பட்டுக்கோட்டை தொகுதி செயலாளர் சக்கரவர்த்தி போன்ற விடுதலை சிறுத்தை கட்சியின் முக்கிய பொறுப்பாளர்கள் முன்னிலையில் இன்று ( 07.03.2025 ) பள்ளத்தூர் பெரியார் சிலை முன்பு தன்னை விடுதலை சிறுத்தை கட்சியில் இணைத்துக் கொண்டார். மேலும் இவர் சேதுபாவாசத்திற்குட்பட்ட 14 ஊர் ஒன்றிணைந்த ஜமாத்தின் பொருளாளராக பதவி வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது….