Wednesday, March 12, 2025
No menu items!
HomeUncategorizedHosur Rajaji Photo&Video Graphers Welfare Association 2025 ஆண்டின் முதற்கூட்டம்

Hosur Rajaji Photo&Video Graphers Welfare Association 2025 ஆண்டின் முதற்கூட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் ராஜாஜி போட்டோஸ்& வீடியோகிராஃபர்ஸ் வெல்பர் அசோசியேஷன் 2025 ஆண்டின் முதல் கூட்டம் ஓசூர் டேங்க் தெருவில் அமைந்துள்ள அம்மன் ஹாலில் ஜனவரி 25 அன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சேலத்தில் மிக பிரபலமான சேலம் சிட்டி போட்டோ சென்டரின் உரிமையாளர் சிட்டி சரவணன் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் நவீன புகைப்பட கேமராவை இயக்குவதற்கான செயல்முறை பயிற்சி CANON நிறுவனத்தால் கொடுக்கப்பட்டது, செயல்முறை விளக்க பயிற்சியில் புகைப்பட கலைஞர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் காலண்டர்,டைரி மற்றும் அடையாள அட்டை வழங்கப்பட்டது, மேலும் சேலம் சிட்டி போட்டோஸ் சார்பில் புகைப்பட மற்றும் வீடியோ கிராஃபர்களுக்கான மின்னணு பொருள்கள் மற்றும் புதிய வகை ஆல்பங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டன புகைப்படக் கலைஞர்கள் பொருட்களை ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர். இந்தக் கூட்டத்திற்கு வந்திருந்த அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தை ஓசூர் ராஜாஜி போட்டோ&வீடியோ கிராஃபர்ஸ் வெல்பர் அசோசியேஷன் கௌரவத் தலைவர் திரு.கார்முகில், தலைவர் T.சிவக்குமார், செயலாளர் M.ஆனந்த், பொருளாளர் M.உமாசங்கர், துணைத்தலைவர் MMG. ராஜு, துணை செயலாளர் ஆனந்த், ஒருங்கிணைப்பாளர் M.முரளி, முன்னாள் அமைப்பாளர் மாதேஷ் ஆகியோர் வெகு சிறப்பாக செய்திருந்தனர்.

ஜி.பி.மார்க்ஸ்
செய்தியாளர் ஓசூர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version