Thursday, June 18, 2026
No menu items!
Google search engine
HomeUncategorizedஒரே ஊரில் இரண்டு திருட்டு தங்கம் மற்றும் வெள்ளி திருடிய மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு.

ஒரே ஊரில் இரண்டு திருட்டு தங்கம் மற்றும் வெள்ளி திருடிய மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு.

அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகேயுள்ள
காரைபாக்கம் சிவன் கோயில் தெருவை சேர்ந்தவர் துரைசாமி மகன் மருதவாணன் நேற்று இரவு வீட்டின் முன்பு பக்கம் கட்டிலிலும் மருதவாணன் மனைவி வீட்டின் உட்புறமும் உறக்கிக்கொண்டிருந்த நிலையில் அதிகாலை 2,.30 மணி அளவில் மருதவாணன் மனைவி அணிந்து இருந்த ஐந்து பவுன் தங்க தாலி சரடினை மர்ம நபர் அறுத்துக்கொண்டு ஓடவும் மனைவியின் அலறலைக்கேட்டு திடுக்கிட்டு எழுந்த மருதவாணன் தனது வீட்டு காம்பவுண்ட் சுவரை நோக்கி மர்ம நபர் ஓடுவதை பார்த்து அந்த மர்ம நபரை பிடிக்கும் நோக்கில் தடுத்தபோது மருதவாணனை திருட்டில் ஈடுபட்ட நபர் கட்டையால் தாக்கிவிட்டு தப்பியோடியுள்ளார்.

இதே ஊரை சேர்ந்த ஜெகநாதன் மகன் இளங்கோவன் மற்றும் அவரது மனைவி இரண்டுபேரும் வீட்டின் முன் அறையில் தூக்கிகொண்டு இருந்து உள்ளனர். விடியற்காலை எழுந்து பார்த போது வீட்டின் பின் பகுதி கதவின் தாழ்பாள் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த இருவரும் வீட்டின் உள்ள சென்று பார்த்தபோது பீரோ திறந்த நிலையில் கலைக்கப்பட்டு அதில் இருந்த அரை பவுன் தங்க செயின் மற்றும் 180 கிராம் எடை உடைய இரண்டு ஜோடி வெள்ளி கொலுசு ஆகியவை களவு போனதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். ஒரே ஊரில் நடைபெற்ற இரண்டு திருட்டு சம்பவங்களால் கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் மேலும் பாதிக்கப்பட்ட இரண்டு குடும்பத்தினரும் கொடுத்துள்ள புகாரின் அடிப்படையில் போலீசார் திருட்டு சம்பவத்தில் தொடர்புடைய மர்ம நபர்களுக்கு வலைவீசியுள்ளனர்.

எம்.எஸ்.மதுக்குமார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments