Monday, June 15, 2026
No menu items!
Google search engine
HomeUncategorizedகுறை தீர்க்கும் நாளில் குறை வைத்த அரியலூர் ஆட்சியர் ,முதல்வரிடம் முறையிடுவோம் என சிபிஐ கட்சியினர்...

குறை தீர்க்கும் நாளில் குறை வைத்த அரியலூர் ஆட்சியர் ,முதல்வரிடம் முறையிடுவோம் என சிபிஐ கட்சியினர் ஆதங்கம்.

தமிழகம் முழுவதும் திங்கள் கிழமையன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அந்தந்த மாவட்ட மக்களின் தேவைகளை அறிய பொதுமக்கள் குறை தீர்ப்பு நாள் நடத்துவது வழக்கம். இதன் தொடர்ச்சியாக அரியலூர் மாவட்ட ஆட்சியராக புதிதாக பதவியேற்றுள்ள மிருணாளினி போதுமான நேரம் இருந்து பொதுமக்களிடம் மனுக்களை பெற்று பரிசீலனை செய்ய துறை அதிகாரிகளிடம் வழங்காமல் காலை 11.45 மணிக்கே தனது அறைக்கு எழுந்து சென்றுவிட்டார் என்றும் இதனால் அரியலூர் நகரத்தின் முக்கியத் தெருக்களில் வேகத்தடை மற்றும் அடையாளக் கோடுகள் இல்லாதது குறித்தும், கிராம மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் குறித்தும் மனு அளிக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் என்ன செய்வதென்று காத்திருந்தனர். பின்னர் மாவட்ட ஆட்சியரின் உதவியாளரை அணுகியபோது,

கலெக்டர் இனி வரமாட்டார் நீங்கள் கோரிக்கை மனுவை மற்ற அதிகாரிகளிடம் கொடுத்துவிட்டுச் செல்லுங்கள்’ எனக்கூறியதாகவும் இதனால் கலெக்டரிடம் நேரில் மனு தரவந்த சிபிஐ கட்சினர் மட்டுமின்றி பொதுமக்களும் ஏமாற்றமடைந்தனர். இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் தரப்பில்
அரியலூர் மாவட்டம் போன்ற கிராமங்கள் நிறைந்த, பின்தங்கிய பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் தங்களின் பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு காண இங்கு நம்பிக்கையோடு வருகை தருகின்றனர்.மாவட்ட ஆட்சியரை நேரடியாகச் சந்தித்து மனு கொடுக்க வந்தவர்களுக்கு இது பெரும் ஏமாற்றத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. ​மேலும், இக்கூட்டங்களில் துறைவாரியான தலைமை அதிகாரிகள் யாரும் பங்கேற்பதில்லை என்றும், அட்டெண்டர், பியூன் மற்றும் கிளர்க்குகள் மட்டுமே வந்து ‘போஸ்ட்மேன்’ வேலை பார்ப்பது போல் மனுக்களைப் பெற்றுச் செல்வதாகவும் இதனால் என்ன? பிரயோஜனம் என்று குற்றம் சாட்டியதோடு,

கடந்த காலங்களில் பணியாற்றிய ஆட்சியர்கள் மக்களின் அனைத்து மனுக்களையும் நேரடியாகப் பெற்று நடவடிக்கை எடுத்ததையும், வராத துறைஅதிகாரிகளுக்கு மெமோ அனுப்பியதையும் சுட்டிக்காட்டினர். மேலும் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் உடனடியாகத் தலையிட்டு, அரியலூர் மாவட்ட ஆட்சியரின் இத்தகைய போக்கை முறைப்படுத்த வேண்டும் எனவும், குறைதீர்க்கும் நாளில் தலைமை அதிகாரிகள் அனைவரும் கட்டாயம் பங்கேற்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் முதலமைச்சருக்கு அவசர புகார் மனு அனுப்பப்பட உள்ளதாக கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் தண்டபாணி கூறியுள்ளார்.

எம்.எஸ்.மதுக்குமார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments