வைகோ பேச்சு :
1938 ல் இந்தி திணிப்புக்கு எதிரான நடைபயணம் திருச்சியிலிருந்து துவங்கியது அதை தந்தை பெரியார் உள்ளிட்டோர் துவக்கி வைத்தனர். அதே திருச்சியில் இன்று சமத்துவ நடைபயணத்தை மேற்கொள்கிறோம். முதல்வர் ஸ்டாலின் அதை துவக்கி வைக்கிறார்.
சனாதான கூட்டத்தால் சமய நல்லிணக்கம் பாழ்பட்டு போகுமோ என்கிற சூழலில் டெல்லியின் அடிவருடிகள் ஜாதி, மதத்தின் பெயரால் மோதல்களை உருவாக்க துடிக்கிறார்கள்.
வட மாநிலத்தில் மோதல்கள் இருந்த போதும் தமிழ்நாட்டில் அனைவரும் ஒற்றுமையாக வாழ்ந்து வந்தார்கள்.
தமிழ்நாட்டில் ஜாதி சமய மத பூசல்களுக்கு இடமில்லை என்பதை எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும்
திமுக வின் பொற்கால ஆட்சி தொடர திமுக கூட்டணிக்கு ஆதரவு அளியுங்கள் என மக்களிடம் பிரச்சாரம் செய்ய உள்ளோம்.
