அரியலூர் மாவட்ட காவல் துறை சார்பாக11.01.2026 இன்று “ 37-வது சாலை பாதுகாப்பு மாதத்தை” முன்னிட்டு காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா.சாஸ்திரி உத்தரவின்படி, அரியலூர் நகர போக்குவரத்து காவல்துறையின் சார்பாக, போக்குவரத்து காவல் ஆய்வாளர் கார்த்திகேயன் தலைமையில் கலெக்டரேட் ரவுண்டானா பகுதியிலும், ஜெயங்கொண்டம் போக்குவரத்து காவல்துறை சார்பாக போக்குவரத்து காவல் ஆய்வாளர் மதிவாணன் தலைமையில் கழுவந்தோண்டி புறவழிச்சாலை மேம்பாலம் அருகிலும் சிறப்பு வாகன தணிக்கை சோதனை நடைபெற்றது.

இதில் 500க்கும் மேற்பட்ட இரு சக்கர, நான்கு சக்கர வாகனம் மற்றும் கனரக வாகனங்களில் தடை செய்யப்பட்ட பொருட்களான ஏர் ஹாரன்(Air Horn), கூடுதல் எல்.இ.டி லைட்டுகள்(LED Lights), பம்பர்(Bumper), சன் ஃபிலிம்(Sun Film), நம்பர் பிளேட்டுகள்(Number Plates), கூடுதல் ஒலி எழுப்பக்கூடிய சைலன்ஸர்கள் முதலியவற்றை பறிமுதல் செய்தனர்.
மேலும் 15.01.2026 க்குள் வாகனங்களில் இருந்து தடை செய்யப்பட்ட பொருட்களை அகற்றி விடவும், இல்லையெனில் அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பாக அகற்றப்படும். மேலும் அபராதம் விதிக்கப்படும். என மாவட்ட காவல்துறை சார்பாக வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எம்.எஸ்.மதுக்குமார்.
