அரியலூர் மாவட்டம் செந்துறை காவல் எல்லைக்குட்பட்ட நத்தகுழி கிராமம் அருகே நேற்று 08.1 2026 மாலை 60 வயதுடைய விசாலாட்சி என்பவர் தான் பிறந்த ஊரான குறிச்சிகுளம் சென்று விட்டு வீடு திரும்புகையில் நந்தக்குழி ஏரிக்கரை அருகே பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் தனக்கு முன் சென்று வாகனத்தை நிறுத்திவிட்டு விசாலாட்சி கடந்து செல்லும்போது அந்த மர்மநபர் கழுத்தில் அணிந்திருந்த இரண்டரை பவுன் தங்கச் செயினை பறித்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பி ஓடி விட்டதாக செந்துறை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதேபோல் கடந்த 28.12.25 ஆம் தேதி செந்துறை காவல் எல்லைக்குட்பட்ட வஞ்சினபுரம் கிராமத்தை சேர்ந்த 75 வயதுடைய அஞ்சலம் என்ற வயதான பெண்மணி வஞ்சினபுரம் கிராமத்திலிருந்து குழுமூர் செல்லும் மெயின் ரோட்டில் சாலையின் ஓரத்தில் நின்று கொண்டிருந்த அடையாளம் தெரியாத மர்மநபர் அஞ்சலம் கழுத்தில் அணிந்திருந்த 3 1/2 (மூன்றரை) பவுன் தங்க நகையை பறிக்க முயற்சி செய்தபோது அஞ்சலம் செயினை பிடித்துக்கொண்ட கூச்சலிட அந்த மர்ம நபர் பாதி செயினை பறித்துக் கொண்டு தப்பிச்சென்றுள்ளார்.
இவ்விரு சம்பவங்களிலும் ஈடுபட்ட நபர் ஒருவரா? அல்லது வேறுவேறு ஆளா? சங்கிலி பறிப்பில் ஈடுபடும் நபர் பழைய அல்லது புதிய குற்றவாளியா ? என்று பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் ஆரய்ந்து வருகின்றனர் இவ்விரு சம்பவங்களும் பொதுமக்களிடையே குறிப்பாக வயதான பெண்மணிகளிடம் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதால் சங்கிலி பறிப்பில் தொடர்புடைய குற்றவாளியை விரைந்து பிடிக்கவும். பொதுமக்கள் அச்சத்தை போக்கவும் காவல்துறைக்கு பொதுமக்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர்.
எம்.எஸ்.மதுக்குமார்.
