தஞ்சாவூர் மாவட்டம் பாப்பாநாட்டில் துர்கா ஸ்டாலின் அறக்கட்டளை சார்பில் துணை முதல்வர் உதயநிதிஸ்டாலின் பிறந்தநாள் நிகழ்ச்சி நலத்திட்டம் உதவி வழங்கும் விழா நேற்று நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் தஞ்சை மத்திய மாவட்ட செயலாளர் துரை. சந்திரசேகர், கலந்துகொண்டு தலைமை தாங்கினார் நிகழ்ச்சிக்கு தஞ்சை எம். பி. முரசொலி, முன்னிலை வகித்து சிறப்புரையாற்றினார் நலத்திட்ட உதவி நிகழ்ச்சியில் சுமார் 500 க்கு மேற்பட்ட பெண்களுக்கு சேலை, மற்றும் துண்டு வழங்கப்பட்டது.

இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை பெற்றனர் நிகழ்ச்சியில் துர்காஸ்டாலின் அறக்கட்டளை தலைவர் வினோசெங்கதிர், ஒரத்தநாடு தெற்கு ஒன்றிய செயலாளர் முருகையன், பொதுக்குழு உறுப்பினர் திராவிட கதிரவன், மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் மணவழகன், வழக்கறிஞர் இளையபாரதி, மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் தமிழரசி, உள்ளிட்ட திமுக ஒன்றிய நிர்வாகிகள் கிளைச் செயலாளர்கள் மகளிர் அணியினர் ஏராளமானோர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினர் நலத்திட்ட உதவி நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தஞ்சை மத்திய மாவட்ட மகளிர் அணி தலைவர் கலைமணிஇளையபாரதி செய்திருந்தார்,
செய்தியாளர்.பழனிவேல்
