Tuesday, July 1, 2025
No menu items!
HomeUncategorizedயார் இந்த மிரட்டல் ஆய்வாளர்.! தஞ்சை காவல்துறை விளக்கம்.!

யார் இந்த மிரட்டல் ஆய்வாளர்.! தஞ்சை காவல்துறை விளக்கம்.!

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தை சேர்ந்த ஆடிட்டர் ரவிச்சந்திரன் என்பவர் அவருக்கு சொந்தமான குலசேகரநல்லூர் கிராமத்தில் உள்ள சுமார் 80 சென்ட் நிலத்தை அவருடைய மருமகன் வெங்கடேஷ் என்பவருக்கு 2020-ம் வருடம் விற்பனை செய்துள்ளார். இந்நிலையில் மேற்படி நிலத்தினை நீர்வளத்துறை (WRD), கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்டும் பணிக்காக கையகப்படுத்தி அதற்கு இழப்பீடாக ரூ.54,00,000/- வழங்கியுள்ளது. பின்னர் ரவிச்சந்திரன், நீர்வளத்துறை கையகப்படுத்தப்பட்ட இடத்தில் இருந்த சுமார் 30 தேக்கு மரங்களை யாருக்கும் தெரியாமல் சட்டவிரோதமாக வெட்டியுள்ளார். இதனை அறிந்த தர்மபுரி மாவட்டம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்ற தடுப்பு பிரிவில் (IUCAW) பணியாற்றி வரும் காவல் ஆய்வாளர் நெப்போலியன் என்பவர் கடந்த 08.03.2025 அன்று காலை 11.00 மணியளவில் மேற்படி ரவிசந்திரனை தொடர்பு கொண்டு நீர்வளத்துறையால் கையகப்படுத்தப்பட்ட, இழப்பீடு கொடுத்த இடத்தில் இருந்து சட்டவிரோதமாக தேக்கு மரங்கள் வெட்டியது தொடர்பாக பந்தநல்லூர் காவல் நிலையத்தில் ரவிச்சந்திரன் மீது வழக்கு பதிவு செய்யப்போவதாகவும், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யாமல் இருக்க வேண்டுமானால் 1 கோடி ரூபாய் தனக்கு வழங்குமாறு மிரட்டியுள்ளார். மேலும் மாவட்ட ஆட்சியருக்கு தெரியாமலே, தான் ஆட்சியரின் உறவினர் என்றும், இது தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருக்கச் செய்திட தன்னால் முடியும் என புகார்தாரரை நம்ப வைத்துள்ளார்.

இந்நிலையில் ரவிச்சந்திரன், காவல் ஆய்வாளர் நெப்போலியனுக்கு முறையே ₹25 லட்சம், ₹55 லட்சம், ₹20 லட்சம் என தர்மபுரி உள்ளிட்ட வெவ்வேறு இடங்களுக்கு சென்று 1 கோடி ரூபாய் கொடுத்துள்ளார். மீண்டும் ரவிச்சந்திரனை தொடர்பு கொண்டு மேலும் 1 கோடி ரூபாய் வேண்டும் என்று காவல் ஆய்வாளர் மிரட்டியதால் மனமுடைந்த ரவிச்சந்திரன் இச்சம்பவம் தொடர்பாக தஞ்சாவூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். புகார் தொடர்பாக தஞ்சாவூர் மாவட்ட குற்றப்பிரிவில் Cr.No.06/2025 u/s 316(4), 319(2), 318(4), 351(2) BNS – ன் படி வழக்குப் பதிவு செய்யப்பட்டதுடன், தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை செய்து வந்த நிலையில், 03.04.2025 அன்று தர்மபுரி தொப்பூர் சுங்கசாவடி நிலையம் அருகில் புகார்தாரர் ரவிச்சந்திரனிடமிருந்து காவல் ஆய்வாளர் நெப்போலியன் ₹5 லட்சம் பெற்றுக்கொண்ட போது தனிப்படையினர் அவரை கையும் களவுமாக கைது செய்தனர். கைது செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் நெப்போலியன் கும்பகோணம் முதலாவது நீதிமன்ற நடுவர் முன்பு ஆஜர்படுத்தப்பட்டு 15.04.2025-ம் தேதி வரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டு புதுக்கோட்டை சிறைசாலையில் அடைக்கப்பட்டார். இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணை மற்றும் சோதனைகளில் ஏமாற்றப்பட்ட பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் புலன்விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version