Sunday, August 3, 2025
No menu items!
HomeUncategorizedமுன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் தஞ்சை பெரிய கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் தஞ்சை பெரிய கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.

பஞ்சாப்பை சேர்ந்த முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் வேகபந்து வீச்சாளர் சேட்டன் சர்மா தமிழகத்திற்கு ஆன்மீக சுற்றுப்பயணம் வந்த நிலையில், தஞ்சை பெரிய கோயிலில் பெருவுடையார் மற்றும் அம்பாலை சுவாமி தரிசனம் செய்தார். முன்னதாக தஞ்சை பெரிய கோயில் வளாகத்தில் உள்ள வராகி அம்மன் முன்பு அமர்ந்து சாமி தரிசனம் செய்தார். இவர் அப்போதைய புகழ்பெற்ற கேப்டன் கபில்தேவ் அணியில் இந்திய கிரிக்கெட் அணியின் சார்பில் விளையாண்ட வேக பந்துவீச்சாளர் ஆவார்.

மேலும் 1987 ஆம் ஆண்டு உலக கோப்பையில் ஹட்ரிக் எடுத்த முதல் இந்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு. 70களில் உள்ள இளைஞர்களுக்கு மிகவும் பரிச்சயமான சேட்டன் சர்மா தஞ்சை பெரிய கோயிலில் சுவாமி தரிசனம் செய்ததோடு கற்சிலைகளில் செய்யப்பட்டுள்ள அணிகலன்களை தொட்டு ரசித்து கண்டு களித்தார். தஞ்சை பெரிய கோயில் வந்த சுற்றுலா பயணிகள் சேட்டன் சர்மாவை பார்த்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version