திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே காவேரி ஹார்ட்சிட்டி மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனை மிக குறுகிய காலத்தில் 500 எலெக்ட்ரோ பிசியாலஜிகல் சிகிச்சைகளை செய்து சாதனை படைத்துள்ளது. இது குறித்த செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சி மருத்துவமனை வளாகத்தில் இன்று நடைபெற்றது. இதில் முன்னணி எலக்ட்ரோ பிசியாலஜிஸ்ட் & இண்டர்வென்ஷனல் கார்டியாலாஜிஸ்ட் டாக்டர் ஜோசப் பேசுகையில்,.. . வெற்றிகரமாக சிகிச்சை பெற்ற நோயாளிகள் எண்ணிக்கையை விட எங்களது இலக்கு சமூகத்தின் அனைத்து மக்களும் குறைந்த விலையில் இந்த பயனை அடைந்ததில் எங்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி என்றார். தொடர்ந்து செயல் இயக்குநர் செந்தில் குமார் பேசுகையில்,… காவேரி ஹார்ட்சிட்டி மருத்துவமனை இருதய சிகிச்சை சிறப்பு தனி பிரிவாக செயல்பட்டு மூன்றே ஆண்டுகளில் மேற்கண்ட சாதனையை நிகழ்த்தி உள்ளது. எலெக்ட்ரோ பிசியாலஜி (EP ) என்பது இதய சிகிச்சை பிரிவின் தனி சிறப்பாக நோயாளிகளின் சீரற்ற இதய துடிப்பு கோளாறுகளை கண்டறிந்து கையாள உதவுகிறது. இதய நோயாளிகள் ஒரு EP ஆய்வகத்தில் தங்களை சோதனைக்கு உட்படுத்தி உபாதைகளை கண்டறிந்து சிகிச்சை மேற்கொள்ளலாம். உயரிய அதி நவீன 3D தொழில்நுட்ப வசதிகள் கொண்ட எலக்ட்ரோ பிசியாலஜி (FP Lab) ஆய்வகம் முதல்முறையாக 2021 ஆம் ஆண்டு காவேரி ஹார்ட்சிட்டி மருத்துவமனையில் துவங்கப்பட்டது. கடந்த 3 ஆண்டுகளில் 500 க்கும் மேற்பட்ட சீரற்ற இதய துடிப்பு கொண்ட நோயாளிகளுக்கு சிறப்பான முறையில் வெற்றிகரமான சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இலங்கை, வங்காளதேசம் மற்றும் மலேசியா போன்ற வெளிநாடுகளில் இருந்து வரும் நோயாளிகளும் இதன் மூலம் பயன் பெறுகின்றனர். காவேரி ஹார்ட் சிட்டி மருத்துவமனை தொடர்ந்து உலகத்தரமான நவீன
தொழில்நுட்பங்களை இப்பகுதிக்கு கொண்டு வருவதில் முன்னோடியாக திகழ்கிறது. எலக்ட்ரோபிசியாலஜி துறையில் எங்களின் சேவை நோயாளிகளுக்கு பயனளிப்பது மட்டுமல்லாமல், எங்கள் மருத்துவமனையில் எலக்ட்ரோ பிசியாலஜியில் (EP ) PNB பாடத்திட்டத்தை துவங்குவதற்கு NBE (தேசிய தேர்வு வாரியம்) அங்கீகரித்துள்ளது. நமது நாட்டில் FP சூப்பர் ஸ்பெஷாலிட்டி கல்வியை தொடங்க அங்கீகாரம் பெற்ற ஒரு சில கார்பரேட் மருத்துவமனைகளில் எங்களது மருத்துவமனையும் ஒன்றாகும் என்றார். இந்த செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சியின் போது முதுநிலை பொது மேலாளர் மாதவன், துணை மருத்துவ நிர்வாகி கோகுல கிருஷ்ணன், முதுநிலை பொது மேலாளர் ( இயக்குதல் ) ஆண்ட்ரூஸ் நித்யதாஸ் ஆகியோர் உடன் இருந்தனர்.