மதுரை மாவட்டம், மேலூர் பகுதியில் கடந்த இரண்டு மாதங்களாக டங்ஸ்டன் எதிர்ப்பு போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், மக்களுக்கு ஆதரவாகவும், டங்ஸ்டன் திட்டத்திற்கு எதிராகவும் மேலூர் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் சுமார் 800 பேர், வகுப்புகளை புறக்கணித்து இன்று (09.01.2025) உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். AISF சார்பில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இன்று காலை 11 மணியளவில் AISF மாணவர் பெருமன்றத்தின் அரசு கலைக் கல்லூரியின் கிளைச் செயலாளர் கா.ராஷித் தலைமையில், AISF மாவட்டத் தலைவர் ஜெகநாதன், மாநிலத் துணைத் தலைவர் விக்ரம், மாநிலக் குழு உறுப்பினர் சேதுபாண்டி மற்றும் மேலூர் தாலுகா AIYF செயலாளர் நொண்டிச்சாமி மற்றும் அருண், கிஷோர், பிரவீன் சின்னமணி ஆகியோர் கலந்துகொண்டு டங்ஸ்டன் திட்டத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர். AISF மேலூர் கல்லூரி நிர்வாகி காவியா கண்டன உரையாற்றினார். மாணவர்கள் போராட்டத்தை அடுத்து, கல்லூரிக்கு முன்பாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
வ. வரதராஜன்,
மேலூர் வட்ட செய்தியாளர்.