இரவு நேரத்தில் துறையூர் பேரூந்து நிலையம் பகுதியில் உள்ள ஹைமாஸ் விளக்குகள் தவிர வேறு எந்த விளக்குகளும் எரியாததால் இருட்டில் மக்கள் அவதி படுகிறார்கள். மேற்கூரை தகடுகளை எடுத்து ஒரு புறம் தடுப்பை வேறு அமைத்து என்ன நடக்கிறது என்று தெரியாத அளவுக்கு ஆபத்தான நிலையில் உள்ளது. ஏராளமான பொதுமக்கள்பள்ளிகல்லூரிமாணவமாணவிகள், பெண்கள் பேரூந்துக்காக காத்துக் இருக்கும் இடத்தில் அவர்கள் பாதுகாப்பு பற்றி எந்த கவலையும் இல்லாமல் நடந்து கொள்ள துறையூர் நகராட்சி அதிகாரிகளுக்கு எப்படி மனது வருகிறது என்று தெரியவில்லை.
ஏதேனும் அசம்பாவிதம் நேரிட்டால் பழி பாவம் காவல்துறை அதிகாரிகள் மீது தானே வரும் நமக்கென்ன வந்தது என்று நினைக்கிறார்கள் என்பது போல தான் தெரிகிறது. தயவுசெய்து தமிழக முதல்வர் M.K. Stalin துணை முதல்வர் UdhayanidhiStalin அவர்களோ அமைச்சர் K.N.NEHRU அவர்களோ அல்லது சட்ட மன்ற உறுப்பினர் Stalin Kumar அவர்களோ ஏதாவது அசம்பாவிதம் ஏற்படும் முன்பே நடவடிக்கை எடுக்க அறிவுறுத்த மக்கள் சார்பில் சமூக ஆர்வலர்கள் கேட்டு கொள்கின்றனர்…
செய்தியாளர் ; ரூபன்ராஜ்
