தமிழ்நாடு திருமண அலங்கரிப்பாளர்கள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் மாநில தலைவர் பாலமுருகன் தலைமையில் திருச்சியில் இன்று நடைபெற்றது மாநில துணைத்தலைவர் நாசர் மணிவண்ணன் மாநில கவுரவ ஆலோசகர் தொல்காப்பியன் மாநில பொருளாளர் பிரபு மாநில செயலாளர் சிவக்குமார் திருச்சி மாவட்ட தலைவர் சந்திரசேகர் ஆட்டோ சங்கர் செயலாளர் ரஞ்சித் அமைப்பு சாரா தொழிலாளர் சங்க நிர்வாகிகள் அழகு குமார், ராஜ் மற்றும் பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் தைப்பொங்கலை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு ஐந்தாயிரம் ரூபாய் வழங்க வேண்டும் திருமண அமைப்பாளர்களுக்கு தனி நல வாரியம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
