திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் துறையூர் ஆர்த்தி தனியார் திருமண மண்டபத்தில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான தமிழ்நாடு அரசின் சார்பில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழா நடத்தப்பட்டது.
இதில் துறையூர் சட்டமன்ற உறுப்பினரும் தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகரருமான எம் ரவிசங்கர் குத்து விளக்கு ஏற்றி துவங்கி வைத்தார். 120க்கும் மேற்பட்ட தாய்மார்களுக்கு மஞ்சள் குங்குமமும் வெற்றிலை பாக்கு வளையல் பட்டுப்புடவை பழங்கள் உள்ளிட்ட ஒன்பது வகையான பொருட்கள் அடங்கிய சீர்வரிசை தொகுப்பை வழங்கி வாழ்த்தினார்.
சட்டமன்ற உறுப்பினர் அவர் பேசுகையில் 19 வருடம் முன்பு அவர் மனைவிக்கு நடந்த வளைகாப்பு விழாவை பற்றி பேசினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் இப்போ ஒரு அண்ணனாகவும், தம்பியாகவும், உங்களில் ஒருவராக இந்த விழாவில் கலந்து கொண்டது பெரும் மகிழ்ச்சியாக உள்ளது என கூறினார்.
இதில் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் ஜெகன்மோகன் துறையூர் வட்டாட்சியர் சித்ரா ஒருங்கிணைந்த குழந்தைகள் திட்ட அலுவலர் மற்றும் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட இணை செயலாளர் மதன் மற்றும் துறையூர் தெற்கு நகரச் செயலாளர் தளபதி வினோத் வடக்கு நகர செயலாளர் சூர்யா துறையூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் தர்மா,வடக்கு ஒன்றிய செயலாளர் ரவி,தெற்கு ஒன்றிய செயலாளர் சுதாகர்,மேற்கு ஒன்றிய செயலாளர் சிவபிரகாஷ் மற்றும் த வெ க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
துறையூர் செய்தியாளர்: ரூபன்ராஜ்

