நாளை (வெள்ளிக்கிழமை) அன்று காலை 8 மணி அளவில் சட்டமேதை பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கரின் நினைவு நாளை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள அவரது உருவ சிலைக்கு கழக முதன்மை செயலாளர், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு வழிகாட்டுதலின் படி, திருச்சி மத்திய மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் க.வைரமணி தலைமையிலும், மாநகர செயலாளர் மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் முன்னிலையிலும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தபடுகிறது.
இந்நிகழ்ச்சியில் திருச்சி மத்திய மாவட்ட, மாநகர, அனைத்து ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், கிளை கழக நிர்வாகிகள், முன்னாள், இந்நாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் தலைமைசெயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், அனைத்து அணிகளின் பொறுப்பளர்கள் கழக முன்னோடிகள், செயல் வீரர்கள் அனைவரும் தவறாது கலந்துகொண்டு மறைந்த சட்டமேதை பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கருக்கு வீரவணக்கம் மரியாதை செலுத்திட வேண்டுகிறேன்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.