மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு தனி பாடத்திட்டம்: தனியார் பள்ளிகளுக்கு பாதுகாப்புச் சட்டத்தை உருவாக்க வேண்டும். திருச்சியில் நடந்த மாநில பொதுக் குழுவில் தீர்மானம்
தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சியில் இன்று இளங்கோவன் தலைமையில் நடைபெற்றது பார்க்கவன் பச்சை முத்து வரவேற்றார்.மணப்பாறை செளமா.ராஜரத்தினம், மணப்பாறை கல்வி நிறுவனங்கள் தலைவர் ராமமூர்த்தி,,வெங்கடேஸ்வரா கல்வி நிறுவனங்களின் தலைவர் தங்கமூர்த்தி மற்றும் தனியார் பள்ளிகளின் தலைவர்கள் முன்னிலை வகித்தனர்.பேராவூரணி குமரப்பா கல்வி நிறுவனங்களின் நிறுவனர் ஸ்ரீதர் விளக்க உரையாற்றினார்.தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கத்தின் நிறுவனர் பி டி அரசகுமார் புதிய மாநில பொறுப்பாளர்களை வாழ்த்தி சிறப்புரையாற்றினார்.முடிவில் சீர்காழி பெஸ்ட் கல்வி நிறுவனங்களின் தலைவர் ராஜ்கமல் நன்றி கூறினார்.

கூட்டத்தில் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில்,ஆசிரியர்கள் மற்றும் பள்ளி உடைமைகளை பாதுகாத்திடும் நோக்கில் தனியார் பள்ளிகளுக்கு பாதுகாப்புச் சட்டத்தை உருவாக்க வேண்டும்,அரசு பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்குவது போல தனியார் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கும் சம அளவில் நல்லாசிரியர் விருது வழங்க வேண்டும் என தமிழக அரசை கேட்டுக் கொள்வது,அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் பாதிப்பில்லாத கல்வி கட்டணத்தை நிர்ணயம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்,சிபிஎஸ்சி உள்ளிட்டபிற வாரிய பள்ளிகளுக்கு உள்ளதைப் போல மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கான தனித்துவம் கொண்ட பாடத்திட்டத்தை ஏற்படுத்திட வேண்டும் என தமிழக அரசை கேட்டுக் கொள்வது உள்ளிட்ட 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
