திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் ஹோட்டலில் தமிழ்நாடு குறவர் சமூக பாதுகாப்பு குழுவின் மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டம். கடலூர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்றது
இக் கூட்டத்தில் குறிஞ்சி நிலத் தோன்றல் தாய் தமிழ் இனம் குறவர் இனத்தின் மறைக்கப்பட்ட அடையாளத்தை மீட்டெடுக்க மறைக்கப்பட்ட குறவர் இனத்தின் சமூக நீதியை வென்றெடுக்க , புறக்கணிக்கப்பட்ட அரசியல் அதிகாரத்தில் பங்கெடுக்க தமிழகம் தழுவிய வலிமையான அமைப்பை உருவாக்க வேண்டும் என 30 மாவட்டத்திற்கும் மேற்பட்ட குறவர் இன நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் கலந்து கொள்ள வருகை புரிந்த அனைவரையும் திருச்சி ரத்தினம் வரவேற்றார் . தேவகிருஷ்ணன் விளக்க உரையாற்றினார் .
திருவாதிரை, செல்லக்கண்ணு . மயிலை சிற்றரசு, ரவி, பழனிச்சாமி , ரவிச்சந்திரன். பழனிச்சாமி ஆகியோர் சிறப்புரையாற்றினர் .
முத்து கண்ணன் , சுரேஷ், ரமேஷ், மணிகண்டன் உள்ளிட்ட பலர் முன்னிலை வகித்தனர்.
முடிவில் திருச்சி சுரேஷ் அனைவருக்கும் நன்றி உரையாற்றினார் .
