திருச்சி டிரேட் சென்டர் புதிய நிர்வாகப் பொறுப்பாளர்களை அறிவித்தார் இயக்குநர் M.முருகானந்தம் அறிவித்தார். திருச்சி டிரேட் சென்டர் மூலமாக சிறு, குறு தொழில், மற்றும் பெரும் தொழில் நடத்துபவர் களுக்கு TTC யால் என்ன என்ன ஒத்துழைப்பும் , தொழில் வளர்ச்சிக்கான தாங்கள் பங்கு என்ன என்றும் விளக்கினார். திருச்சி திரட்சியான தொழில் களான எஞ்ஜிநியரிங் தொழில், மற்றும் அதனைச் சார்ந்த அனைத்து தொழில்களும் திருச்சியில் இயங்கும் போது தமிழகத்தின இதய பகுதியான, அதாவது தமிழகத்தின் எந்த நகரத்திலிருந்து வருவதாக இருந்தாலும் போக்குவரத்து நேரம் மிகக் குறைவாகவும் , சாலை வசதிகளும் தற்போது சிறப்பாக உள்ளது. ரிங் ரோடு சிறப்பாக அமைந்தால் பலமான தொழில் கட்டமைப்பு நகரமாக திருச்சி வளரும் என தெரிவித்தார். இம் முயற்சிக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பெய்யா மொழி அவர்களும் , திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவரும் பெருமுயற்சிக்கு பேராதரவு கொடுத்ததாகவும் தெரிவித்தார்.