திருச்சியில் இன்று நடந்த மின் வாரியத்தில் 62,000 காலிப்பணியிடங்களை நிரப்பி இளைஞர்களுக்கு வேலை வழங்கிடவேண்டும்,
01.12.2023 முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை துவங்கிடவேண்டும்,பேசி முடிக்கும் வரை 01.12.2023 முதல் இடைக்கால நிவாரணம் ரூ.5000/- வழங்கிடவேண்டும்,
09.07.2024-ல் மத்திய அமைப்பு நடத்திய காத்திருப்பு போராட்டத்தில் மின்வாரிய தலைவர் அளித்த வாக்குறுதிப்படி 01.12.2019 ற்கு பிறகு பணியில் சேர்ந்த 10,000 கேங்மேன் பணியாளர்கள் உட்பட அனைவருக்கும் 6 சதவீத ஊதிய உயர்வு வழங்கிடவேண்டும்,
ஒப்பந்த ஊழியர்களை அடையாளம் கண்டு தினக்கூலி வழங்கிடவேண்டும், கணக்கீட்டு பிரிவு உட்பட அனைத்து ஊழியர்களுக்கு பதவி உயர்வுகளை உடனடியாக வழங்கிடவேண்டும்.
இலால்குடி, துறையூர், மணப்பாறை, முசிறி மற்றும் கிழக்கு கோட்டத்திலும், ஆசிரியர், அரசு ஊழியர்களுக்கு வழங்கியுள்ள வீட்டு வாடகை படி, நகராட்டு படி உயர்வை மின்வாரிய ஊழியர்களுக்கும் வழங்கிடவேண்டும்,
மருத்துவமனைக்கு மருத்துவரை நியமித்து, மன்னார்புரம், தென்னூர் பகுதிகளுக்கு மருத்துவ சேவையை வழங்கிடவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மிளகு பாறையில் உள்ள மின்வாரிய அலுவலகம் முன்பு சிஐடியு தமிழ்நாடு மின்வாரிய மத்திய அமைப்பு சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
வட்டத் தலைவர் நடராஜன் தலைமை தாங்கி பேசினார். சிஐடியுமாநில துணை தலைவர் ரங்கராஜன்,வட்டச் செயலாளர் பழனியாண்டி, வட்ட பொருளாளர் இருதயராஜ் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.முடிவில் கோட்ட தலைவர் ஜான் பாஸ்கோ ரவி நன்றி கூறினார்.
விளம்பரம்:-