தஞ்சை பெரிய கோயிலின் தேர் புகழைப் பற்றி யாருக்கும் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. பல்லாயிரக்கணக்காண பக்தர்கள் நான்கு வீதிகளிலும் அணி திரள கம்பீரமாக வரும் தஞ்சை பெரிய கோவில் தேர் இந்த முறை நான்கு வீதிகளில் பல இடங்களில் தேர் நின்று நின்று வந்தது பக்தர்களிடையே மிகுந்த மன வருத்தத்தை உண்டாக்கியுள்ளது. இதற்குக் காரணம் கடந்த ஆண்டை விட தேர் அகலமாக செய்யப்பட்டதால் தேரின் மேற்பகுதி இரு புறங்களிலும் உள்ள உயர் மின் அழுத்த கம்பியில் சிக்கியது இதனால் தேர் அரை மணி நேரம் நின்று சென்றது.
தஞ்சை பெரிய கோயில் சித்திரை திருவிழா ஆண்டு தோறும் சித்திரை மாதம் 18 நாட்கள் நடைபெறும், இந்த ஆண்டும் கடந்த 6 ஆம் தேதி சித்திரை திருவிழா தொடங்கியது. 15வது நாளான இன்று தேரோட்டமானது நடைபெற்று வருகிறது. தேர் கடந்த ஆண்டு விட அகலமாக செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது இந்நிலையில் தேர் மேல விதி வழியாக சென்றபோது இரு புறங்களில் உள்ள உயர் மின்னழுத்த கம்பியில் சிக்கியது இதனால் தேர் வழியில் நின்றது. பணியாளர்கள் எவ்வளவு முயற்சி செய்தும் தேரினை இழுக்க முடியாததால் தேரின் இரு புறங்களிலும் உள்ள மரங்கள் அறுக்கப்பட்டு அகலம் குறைக்கப்பட்டு ஜேசிபி எந்திரம் கொண்டு தேர் ஆனது சரி செய்யப்பட்டது.
இதனால் சுமார் அரை மணி நேரம் தேர் செல்ல தாமதமானது மேலும் இரண்டு நாட்களுக்கு முன்பே அதிகாரிகள் அப்பகுதிகளை ஆய்வு செய்து தேரினை அதற்கு தகுந்தார் போல் வடிவமைப்பு செய்து இது போன்ற இடையூறு இல்லாமல் தேரினை கொண்டு செல்ல இந்து அறநிலைத்துறை அரண்மனை தேவஸ்தானம் மற்றும் அரசு அதிகாரிகள் பணி செய்ய வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் பணியின்போது மின் பொறியாளருக்கு லேசான காயமும் உதவியாளருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு தற்போது தஞ்சை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.