தஞ்சை மாவட்டத்தில் பரவலாக பல இடங்களில் கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக ஒரு கிறிஸ்தவ நிறுவனம் பொது மக்களையும் முக்கிய பிரமுகர்களையும் குறி
வைத்து ஒரு கிறிஸ்தவ நிறுவனம் ஏமாற்று வேலைகளில் ஈடுபட்டு வருகிறது என்கிற ரகசிய தகவல் நமக்கு கிடைக்க அது பற்றி விசாரணையில் இறங்கினோம்
ஒரு கிறிஸ்தவ நிறுவனம் தஞ்சையில் உள்ள முக்கிய பிரமுகர்களையும் ஏழை சாமானியர்களையும் குறி வத்து எங்கள் கம்பெனிக்கு நீங்கள் ஒரு லட்ச ரூபாய் கொடுத்தால் அடுத்த மாதமே அதனை வட்டியோடு சேர்த்து 10 லட்ச ரூபாயாக தருகிறோம். 10 லட்ச ரூபாய் கொடுத்தால் ஒரு கோடி ரூபாய் வரை நாங்கள் கொடுக்கிறோம் என்று ஒரு நிறுவனம் தஞ்சை சாமானிய மக்களை குறி வைத்து தங்களின் வியாபார வேட்டையை நடத்தி வருகிறது. வெளி நாட்டில் இருந்து நமக்கு பணம் வருகிறது அதனை பிரித்து அனைவருக்கும் அளிக்க போகிறோம். இன்று ஆசை வார்த்தையை காட்டி பல கோடி வரை அந்த கும்பல் சம்பாதித்து விட்டதாம்.

எந்த இடத்திலும் நமக்கு பணம் கிடைக்கப் போவது யாருக்கும் தெரியக்கூடாது என்பதுதான் அந்த நிறுவனத்தின் முதல் கட்டளையாம். இரண்டாவதாக பணத்தை வங்கி பரிவர்த்தனைகளில் வாங்குவது கிடையாதாம் எந்த வித ஆதாரமுமின்றி பணத்தை பெற்றுக் கொள்வது தான் இவர்களுடைய பிளஸ் பாய்ண்டாம்
அதேபோல இந்த நிறுவனம் முதலில் ஒரிரு மாதங்கள் ஆசையை தூண்டும் வகையில் சதுரங்க வேட்டை நடத்தி பணத்தை சிலருக்கு கொடுப்பது போல கொடுத்து விடுகிறார்கள் அவர்கள் நம்பியதும் மேலும் பல லட்சங்களை அவர்களை வைத்தே வாங்கிக் கொண்டு அதற்குப் பிறகு அவர்களுக்கு அல்வா கொடுத்து விடுவார்களாம். எப்போது கேட்டாலும் அடுத்த மாதம் பணம் வந்துவிடும் பணத்தைப் பிரித்துக் கொடுத்து விடுகிறோம் யாரிடமும் இதை சொல்ல வேண்டாம் சொன்னால் அதற்கு நிர்வாகம் பொறுப்பேற்காது நீங்கள் கொடுத்ததற்கு எந்த ஆதாரமும் கிடையாது என்று அவர்களையும் மிரட்டுகின்றனராம்.
அவர்கள் யாரும் இதுவரை காவல் துறையிடம் புகார் கொடுக்க தயாராக இல்லை இழந்ததை வெளியில் சொன்னால் தங்களுடைய குடும்பத்திற்கு அவமானம் வந்துவிடும் என்பதால் ஒருவர் கூட புகார் தர முன்வரவில்லை. தங்களுடைய சொத்துக்களை விற்று தங்களுடைய கடன்களை அடைத்து வருகிறார்கள்.
இதனை சாதகமாக பயன்படுத்தி அந்த நிறுவனம் தன் சதுரங்க வேட்டையை தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறது. இன்னும் பலரும் ஏமாறாமல் இருக்க ஏமாந்தவர்கள் காவல்துறையிடம் புகார் அளித்தால் இன்னும் பலரும் தப்பித்துக் கொள்வார்கள் இல்லையேல் அந்த மோசடி கும்பல் இன்னும் தன் சதுரங்க வேட்டையை தஞ்சையில் தொடர்ந்து கொண்டு தான் இருக்கும்.
இதனை விட கூடுதலாக வெளிநாட்டில் இருக்கும் பலரும் அந்த நிறுவனத்தில் பணத்தை போட்டிருப்பதாகவும் கூடுதல் தகவல்கள் வெளிவருகிறது.
பொறுத்திருந்து பார்ப்போம் மக்களை ஏமாற்றுபவர்கள்
விரைவில் சிக்குவார்கள்..!
ஆதாரங்களை சேமித்துக் கொண்டிருக்கிறோம் விரைவில் அதனை செய்தியாக வெளியிடுவோம்.
செய்தி – செந்தில்நாதன்.