மத்திய அரசு அண்மையில் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தது, இதில் தமிழகத்திற்கு போதிய நிதி ஒதுக்கவில்லை என குற்றம் சாட்டப்பட்டது,
இதையடுத்து தஞ்சை மாவட்ட திமுக கட்சி சார்பில் மத்திய அரசின் நிதி நிலை அறிக்கையில் தமிழ்நாட்டை வஞ்சித்த பாஜக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு நடைபெற்றது, இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பப்பட்டது, இந்த ஆர்ப்பாட்டத்தில் எம்பி முரசொலி, எம்எல்ஏக்கள் சந்திரசேகரன், நீலமேகம், மேயர் இராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி உள்ளிட்ட திமுக கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்