திமுக மண்டலக்குழு தலைவர் பெண்களை தகாத வார்த்தையில் திட்டியதால் சுற்றி வளைத்து மல்லுக் கட்டிய பெண்கள் திணறிய மண்டல குழுத் தலைவர்.
அப்படி தான் பேசுவேன் என்ன பண்ணுவ என மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சென்னை பெருங்குடி 14 வது மண்டலக் குழு தலைவரும், திமுக சோழிங்கநல்லூர் மேற்கு பகுதி செயலாளருமான ரவிச்சந்திரன், பெருங்குடியில் உள்ள பகுதி நேர நூலகத்திற்கு சென்ற போது அங்கு அதிமுக காலண்டர் ( நாள் காட்டி) மாட்டி வைக்கப்பட்டிருந்ததை கண்டு அங்கு பணியில் இருந்த பெண் ஊழியர்களிடம் அதிமுக காலண்டர் மாட்டி வைத்திருப்பதால் தகாத வார்த்தையில் திட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த, பணியில் இருந்த பெண்கள் திமுக சேர்மன் ரவிச்சந்திரன் இடம் நீங்கள் எப்படி அந்த வார்த்தை பேசுவீர்கள் அதிமுக காலண்டரை எடுக்க சொன்னால் எடுத்து விட போகிறோம் என முறையிட்டனர்.
அதற்கு திமுக பிரமுகர் அப்படி தான் பேசுவேன் என்ன செய்வாய் என ஏக வசனத்தில் மிரட்டும் தொணியில் பேசினார். ஆனால் பெண் ஊழியர்கள் சற்றும் சளைக்காமல் அவரிடம் அவர் செயததை தவறு என வாதிட்டனர்.
பின்னர் அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டார்.
இதனை அங்கிருந்த சிலர் வீடியோ பதிவு செய்து சமூக வலைதளத்தில் பகிர்ந்து திமுக பிரமுகர் செய்யும் அராஜகம் என பரப்பி வருகின்றனர்.இந்த பதிவுக்கு பலரும் தங்கள் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.
செய்தியாளர் மணி