Sunday, June 14, 2026
No menu items!
HomeUncategorizedசெந்துறையில் முன் விரோதம் காரணமாக கத்தியால் வெட்டிய ஐந்து நபர்கள் கைது.

செந்துறையில் முன் விரோதம் காரணமாக கத்தியால் வெட்டிய ஐந்து நபர்கள் கைது.

அரியலூர் மாவட்டம் செந்துறையில் வசிக்கும் உதயகுமார் என்பவர் அவரது தம்பி பரணிக்குமார் வேலை செய்யும் சலூன்கடை அருகே 13.06.26 நேற்று மாலை நின்று பேசிக்கொண்டிருந்த போது இவர்களின் உறவினர்களான சாமிநாதன் அவரது மகன் நித்திஷ்குமார் ஆகியோர்கள் முன் விரோதம் காரணமாக தங்களது கூட்டாளிகளான கல்லங்குறிச்சி ஜெயசூர்யா பிரேம்குமார் மற்றும் அம்மாகுளம் கனகராஜ் ஆகியோர்களோடு வந்து, வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இரு தரப்பினருக்கும் தகராறு முற்றி கைகலப்பு அதிகமாகிய நிலையில், சாமிநாதன் உதயகுமாரை பிடித்துக்கொள்ள நித்திஷ்குமார் மற்றும் அவருடன் வந்த நபர் ஒருவர் கத்தியால் வெட்டியுள்ளனர் இதில், உதயகுமாருக்கும், உதயகுமாரின் நண்பர் கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. இரத்தம் வழிவதை பார்த்த அங்கிருந்தவர்கள் அனைவரையும் சமாதானம் செய்து அனுப்பிவைத்ததோடு
காயமடைந்த இருவரும் செந்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர் இதுகுறித்து உதயகுமார் கொடுத்த புகாரின் பேரில், குற்றசெயலில் ஈடுப்பட்ட மேற்கண்ட நபர்கள் மீது 14.06.26 இன்று கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கை மேற்கொண்டு விசாரணை மேற்கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version