மேற்குவங்க மாநிலம், கொல்கத்தா ஆர் ஜி கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆகஸ்ட் 9 அன்று இரவு பணியில் இருந்த பெண் முதுகலை பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். நாடு முழுவதும் இந்த கொடூர செயலை எதிர்த்து மருத்துவக் கல்லூரி மாணவர்களும் பொதுமக்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ஒருவரை காவல் துறை கைது செய்துள்ள நிலையில், இந்தக் பாலியல் வழக்கை சிபிஐ தாமாக முன்வந்து கையில் எடுத்துள்ளது.
தமிழகத்திலும் கல்லூரி மாணவர்கள் போராட்டம்:
மேற்கு வங்க மாநிலத்தில் கொல்கத்தாவில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண் பயிற்சி மருத்துவருக்கு நீதி கிடைக்க நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரி மாணவர்களும், பொது மக்களும் போராட்டங்கள் நடத்தி வருகின்றன. தமிழகத்திலும் அனைத்து கட்சி தலைவர்களும், உயர அதிகாரிகளும் இந்த கொடுஞ்செயலுக்கு நீதி கேட்டு திருவாரூர் மாவட்டம், திரு வி க அரசு கலைக் கல்லூரியிலும் இன்று (20/08/2024) கல்லூரி மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கல்லூரி கிளை தலைவர் எஸ். செல்வ பிரகாஷ் தலைமையில் மருத்துவ பயிற்சி மாணவிக்கு நீதி கேட்டு போராட்டம் நடைப்பெற்றது. இதில் மாவட்ட துணைச் செயலாளர் வீ சந்தோஷ் மாவட்ட குழு உறுப்பினர் மு.சந்தோஷ்வரன், அறிவழகன் த.சத்தியமூர்த்தி மற்றும் கிளை உறுப்பினர்கள் ஹரிஹரன் விக்கினேஷ் யேகராஜ் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் கொலை வழக்கு இதுவரை நடந்தது என்ன?
கொல்கத்தாவில் உள்ள ஆர் சி கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை பயிற்சி பெண் மருத்துவர் இரவு பணியில் இருந்த பொழுது பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். ஆகஸ்ட் 9 தேதி நள்ளிரவு 3 மணியிலிருந்து அதிகாலை 6:00 மணிக்குள் இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என்று போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்த பெண்ணின் கழுத்து எலும்பு உடைந்து இருப்பதாகவும், கழுத்தை நெரித்து கொலை செய்திருப்பதும் தெரியவந்துள்ளது. சம்பவம் நடைபெற்ற ஆறு மணி நேரத்தில்
குற்றம் சாட்டப்பட்ட நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். சம்பவம் நடந்த இடத்தில் கிடைக்கப்பட்ட ப்ளூடூத் ஹெட் செட் சம்பந்தப்பட்ட நபருடையது எனவும், அது அவருடைய செல்போனில் இணைக்கப்பட்டுள்ளதும் தெரிய வந்ததன் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் அவர்களின் அமர்வில் விசாரணைக்கு வந்தது அதன்படி நாடு முழுவதும் மருத்துவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு தொடர்ந்ததாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
பெண் மருத்துவர்களுக்கு பாதுகாப்பான சூழ்நிலை இல்லாதது எண்ணி உச்சநீதிமன்றம் கவலை கொள்கிறது என்றும் பணியிடத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாவிட்டால் அரசியலமைப்பின் கீழ் சமத்துவம் என்பதற்கு என்ன அர்த்தம் என்று நீதிபதியில் கேள்வி எழுப்பினர்.
பெண் மருத்துவரின் மரணத்தை தற்கொலை என்று மருத்துவமனை நிர்வாகம் மூடி மறைக்க முயற்சி செய்ததற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள் முதல் தகவல் அறிக்கை கொலை என்று பதிவு செய்யப்படவில்லை என சாடினர்.
மேலும் கொல்கத்தா முதுகலை பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கினை விசாரணை நிலை அறிக்கை சிபிஐ தாக்கல் செய்ய வேண்டும் எனவும், வழக்கை வரும் 22ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
மேலும் பெண் பயிற்சி மருத்துவரின் பாலியல் கொலை கண்டித்து கோவாவில் 5 நாட்கள் நடைபெறவிருந்த மருத்துவர்களின் போராட்டத்தை நிறுத்த கோரி அந்த மாநில அரசு கேட்டுக் கொண்டதை அடுத்து டுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
செய்தியாளர்
காவியன்.அ