கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் விஸ்வநாதபுரம் ஊராட்சி கூனப்பள்ளி முனீஸ்வரன் ஆலயம் அருகில் அமைந்துள்ள வாஸ்து சாலா லே அவுட்டின் குடியிருப்போர் நல சங்கத்தின் சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
விநாயகப் பெருமானின் சிறப்பு பூஜையில் குடியிருப்போர் நல சங்கத்தின் தலைவர் விஜயகுமார், செயலாளர் செந்தில், பொருளாளர் டிபு கோபிநாத், பிரம்மஸ்ரீ முத்துலட்சுமி, சிங்கராஜ், சரவணன், சசிகுமார், தியாகராஜன், நாராயண ரெட்டி, பிரவீன் குமார் குடும்பத்தார் நிகழ்ச்சி ஏற்பாட்டில் முக்கிய பங்கு வகித்த சிறார்கள் லோகேஷ், கோட்டை முனியப்பன் மற்றும் சங்க உறுப்பினர்கள், பெண்கள், குழந்தைகள் ஆகியோர் கலந்து கொண்டு விநாயகப் பெருமானின் அருளை பெற்றனர்.