தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் நகர இந்து முன்னணி நடத்தும் 35 ஆவது ஆண்டு விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்றது. அதிராம்பட்டினம் நகரப் பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை செல்லியம்மன் கோவிலில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் சென்று வண்டிபேட்டை சந்திப்பில் நிறுத்தப்பட்டது. மேலும் பட்டுக்கோட்டை நகரப் பகுதி மற்றும் கிராமப் பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை முதல்சேரி, பள்ளிக்கொண்டான் சேண்டாக்கேட்டை மாளியக்காடு, புதுக்கோட்டை உள்ளூர், நடுவிக்காடு, வழியாக வண்டிப்பேட்டை வந்தடைந்தது.
பின்னர் வண்டிப்பேட்டையில் இந்து முன்னணி தஞ்சை தெற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் பிரபாகரன் மற்றும் அதிராம்பட்டினம் நகர பொதுச்செயலாளர் சுரேஷ் ஆகியோர் தலைமையிலும் தெற்கு மாவட்ட பொதுச் செயலாளர் விஜயகுமார் முன்னிலையிலும் அதிராம்பட்டினம் இந்து முன்னணி சார்பாக சிறப்பாக வரவேற்பளிக்கப்பட்டது, தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் இந்து முன்னணி மாவட்ட இணை செயலாளர் அருணாச்சலம் வரவேற்று பேசினார். பாரதிய ஜனதா கட்சி மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் சிறப்புரையாற்றி ஊர்வலத்தை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். ஊர்வலத்தில் 42 வாகனத்தில் 107 விநாயகர் சிலைகள் கொண்டு செல்லப்பட்டது. இதில் சேர்மன்வாடி சுப்பிரமணிய கோவில் தெரு பஸ் நிலையம் கிழக்கு கடற்கரைச் சாலை வழியாக ஊர்வலம் சென்று இறுதியில் ஏரிப்புறக்கரை கடற்கரையை அடைந்தது பின்னர் ஊர்வலத்தில் வந்த அனைத்து சிலைகளையும் ஏரிபுறக்கரையில் தயார் நிலையில் வைக்கப்பட்ட படகுகள் மூலம் ஏற்றி சென்று கடலில் கரைத்தனர். ஊர்வலத்தின் போது தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆசீர் ராவத் உத்தரவின் பேரில் 5 துணை போலி சூப்பரண்டுகள் 15 இன்ஸ்பெக்டர்கள் 25 சப் இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட நானூறு க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.