புதுச்சேரி மாநிலத்தில் பாலியல் வன்கொடுமையால் உயிரிழந்த சிறுமியின் செய்தி புதுச்சேரியை மட்டும் இன்றி இந்தியா முழுவதையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் 2 ஆம் தேதி சனிக்கிழமை பள்ளி விடுமுறை என்பதால், தன் வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்தால் அந்த ஒன்பது வயது சிறுமி. அதனை நோட்டமிட்ட விவேகானந்தா என்ற ஐம்பது வயது க்கு (50+) மேல் உள்ள முதியவன் சாக்லேட் கொடுப்பதாக பொய் சொல்லி சிறுமியை வீட்டு மொட்டை மாடிக்கு அழைத்து சென்று பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார். அது மட்டும் இன்றி கருணாஸ் என்ற 19 வயது நபரும் அவனுடன் சேர்ந்து கூட்டுப் பாலியலில் ஈடுபட்டுள்ளான் . சிறுமியை நான்கு நாட்களாக காணவில்லை என்று பெற்றோர்கள் தேடிக் கொண்டிருக்க, அந்த சிறுமையை இருவரும் சேர்ந்து கூட்டுப் பாலியலில் பயன்படுத்தியுள்ளனர். இந்த கொடூர செயலில் இந்த அப்பாவி சிறுமி இறந்திருக்கிறாள். இதனை அறிந்த அந்த கொடூரர்கள் அந்த அப்பாவி சகோதரியை ஒரு சாக்கு முட்டையில் கட்டி அந்த ஊரின் சாக்கடையில் வீசி இருக்கின்றனர்.
சாக்கு முட்டையில் துர்நாற்றம் அடிக்கிறது என உணர்ந்த பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பின் புதுச்சேரி காவல்துறை விசாரணை செய்ததில் இந்த கொடூரர்கள் இருவரும் கைதாயினர், அதில் கருணாஸ் என்ற கொடூரன் கூட்டு பாலியல் செய்ததை வாக்குமூலமாக அளித்ததின் பேரில் அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு, விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர்.
மாணவ செய்தியாளர்
அ.காவியன்