Sunday, December 22, 2024
No menu items!
Homeஅரசியல்காஞ்சிபுரத்தில் கரை சேரும் அதிமுக. நிஜ கள நிலவரம்.!

காஞ்சிபுரத்தில் கரை சேரும் அதிமுக. நிஜ கள நிலவரம்.!

காஞ்சிபுரத்தில் கரைசேரும் அ.தி.மு.க.!
-நிஜ களநிலவரம்
காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதில் தி.மு.க. மற்றும் பா.ம.க. வேட்பாளர்களை முந்திச் செல்கிறார் அ.தி.மு.க. வேட்பாளர் இ.ராஜசேகர். காஞ்சிபுரம் தொகுதியில் கள நிலவரத்தை பார்ப்போம்..!

1951ஆம் ஆண்டில் முதல் மக்களவை தேர்தலை சந்தித்த காஞ்சிபுரம் தொகுதி அதன் பின்னர் நீக்கப்பட்டது. 2008இல் தொகுதி மறுசீரமைப்புக்கு பின் காஞ்சிபுரம் தொகுதி மீண்டும் உருவாக்கப்பட்டது. இது பட்டியலினத்தவருக்காக ஒதுக்கப்பட்ட தனித்தொகுதியாகும். இத்தொகுதியில் தற்போது செங்கல்பட்டு, திருப்போரூர், செய்யூர், மதுராந்தகம், உத்தரமேரூர், காஞ்சிபுரம் என 6 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன.

இதில் செய்யூரும் மதுராந்தகமும் தனித்தொகுதிகளாகும். காஞ்சிபுரம் தொகுதியில் 2 தொகுதிகள் அம்மாவட்டத்திலிருந்தும் 4 தொகுதிகள் செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்தும் இடம் பெற்றுள்ளன. 1951இல் நடைபெற்ற தேர்தலில் காமன்வீல் கட்சியின் ஏ.கிருஷ்ணசாமி வெற்றிபெற்றார். 2009இல் நடந்த தேர்தலில் காங்கிரஸ், 2014 தேர்தலில் அதிமுக, 2019இல் திமுக என முடிவுகள் அமைந்தன.

கடந்த முறை 2019இல் நடந்த தேர்தலில் திமுக வேட்பாளர் செல்வம் 6.84 லட்சம் வாக்குகளை பெற்று வெற்றிபெற்றார். அதிமுகவின் மரகதம் 3.97 லட்சம் வாக்குகளை பெற்றார். நாம் தமிழர் கட்சியின் சிவரஞ்சனி 62 ஆயிரம் வாக்குகளை பெற்றார்.காஞ்சிபுரத்தில் வசிப்பவர்கள் எதிர்கொள்ளும் மிக முக்கியமான பிரச்சினை, நம்பகமான புறநகர் ரயில் சேவைகள் இல்லாதது மற்றும் ரயில் பாதைகளின் விரிவாக்கம் ஆகும்.
தெற்கு ரயில்வே, செங்கல்பட்டு ரயில் நிலையத்தை மேம்படுத்தி வந்தாலும், அமிர்த் பாரத் ரயில் நிலையத் திட்டத்தின் கீழ், செங்கல்பட்டு, தாம்பரம் வழியாக சென்னை நகருக்கு வரும் ஆயிரக்கணக்கான பயணிகள் மற்றும் வியாபாரிகள், செங்கல்பட்டில் இருந்து காஞ்சிபுரம் செல்லும் வசதியற்ற சேவைகள், ஒற்றையடிப் பாதையில் மட்டுமே நிறுத்தப்பட்டுள்ளது.

மாமல்லபுரத்தில் வாழ்வாதாரத்திற்காக பெரும்பாலும் சுற்றுலாவை நம்பியிருக்கும் மக்கள், மோசமான குடிமைக் கட்டமைப்பு, பொதுக் கழிப்பறைகள் மற்றும் போதிய போக்குவரத்து வசதிகள் இல்லாததால், பருவகாலமாக தங்கள் வணிகங்களை பாதிக்கிறது என்று குற்றம் சாட்டுகின்றனர்.
தற்போதைய மக்களவைத் தேர்தலில் திமுக சார்பாக செல்வம், பாமகவில் ஜோதி வெங்கடேஷ், அதிமுக சார்பாக ராஜசேகர் போட்டியிடுகிறார்கள்.

ஆயிரம் கோயில்களின் நகரம் என அழைக்கப்படும் காஞ்சிபுரத்தில், காமாட்சியம்மன் கோயில், வரதராஜபெருமாள் கோயில், ஏகாம்பரநாதர் கோயில்,கைலாசநாதர் கோயில்கள் எனப் பல கோவில்கள் அமைந்திருப்பதும் இதன் தனிச்சிறப்பு. தவிர, தொழில் அடிப்படையில் பார்த்தால் நெசவுத் தொழில்புரிவோர் இந்தத் தொகுதியில் அதிகம் வசிக்கின்றனர். இங்கு தயாரிக்கப்படும் ‘காஞ்சிப்பட்டு’ பிரபலமானது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில்தான் ‘சனாதனம்’ குறித்து சர்ச்சை கருத்துக்களை வெளியிட்ட உதயநிதிக்கு கோயில் நகரமான காஞ்சிபுரத்தில் மக்கள் பாடம் புகட்டத் தயாராகிவிட்டனர். சிட்டிங் எம்.பி.யாக இருக்கும் செல்வம் மீதான அதிருப்தி, மூன்றாண்டு கால தி.மு.க. ஆட்சிக்கு எதிரான வாக்குகளை அ.தி.மு.க. வேட்பாளர் அப்படியே அறுடை செய்ய காத்திருக்கிறார்.

அ.தி.மு.க. சார்பில் களமிறங்கும் வேட்பாளர் இ.ராஜசேகர் பரங்கிமலை (தற்போது தாமஸ்மலை ஒன்றியம்) ஒன்றிய அ.தி.மு.க செயலாளராக இருக்கிறார். பெரும்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தை அ.தி.மு.க.வின் கோட்டையாக மாற்றிக் காட்டியவர். நீண்டகாலமாக அ.தி.மு.க.விற்கு விசுவாசமாக இருந்ததால், இந்தமுறை அவருக்கு போட்டியிட எடப்பாடி பழனிசாமி வாய்ப்பு கொடுத்திருக்கிறார்.

தற்போது தேர்தல் களத்தில் சிறப்பாக களப்பணியாற்றியவருகிறார். இவரது பிரச்சாரம் மக்களிடையே வெகுவாக கவர்ந்திருக்கிறது. பணத்தை பணமாக பார்க்காமல் வாரியிறைத்து வருகிறார். தி.மு.க. ஆட்சி மீதான வெறுப்பு மற்றும் தற்போதை சிட்டிங் எம்.பி. தொகுதி பக்கம் வராதது… உள்பட பல்வேறு விஷயங்கள் அ.தி.மு.க. வேட்பாளருக்கு சாதகமாக இருக்கிறது. எனவே, வரும் மக்களைவைத் தேர்தலில் காஞ்சிபுரம் தொகுதியில் அ.தி.மு.க. கரைசேறுவது உறுதி என்கிறார்கள் அப்பகுதி மக்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version