Friday, July 4, 2025
No menu items!
HomeUncategorizedஓசூர் மாநகரப் பகுதியில் சிபிஐஎம் சார்பில் மே தின கொடியேற்று விழா பேரணி மற்றும் பொதுக்கூட்டம்

ஓசூர் மாநகரப் பகுதியில் சிபிஐஎம் சார்பில் மே தின கொடியேற்று விழா பேரணி மற்றும் பொதுக்கூட்டம்

8 மணி நேர வேலை 8 மணி நேர ஓய்வு, 8 மணிநேர உறக்கம் என்ற மே தின முழக்கத்தை உயர்த்திப் பிடித்து, தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாத்திட சமரசமின்றி சமர் புரிய மே தினத்தில் சூளுரைப்போம். அனைத்து வகையான சுரண்டலுக்கும் முடிவுகட்ட, சமத்துவச் சமூகத்தை உருவாக்கிட மே தினத்தில் உறுதியேற்று,


கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகரத்தில் மே 1 அன்று மத்திகிரி, மிடுகரபள்ளி ஆகிய கிளைகளில் செங்கொடி ஏற்றி, நவதி, ITI இரு இடங்களில் ஆட்டோ தொழிற்சங்க புதிய கிளைகள் மாநகர செயலாளர் முன்னிலையில் திறந்து வைத்து, CITU & CPIM அலுவலகத்தில் செங்கொடி ஏற்றி RC சர்ச் முன்பிருந்து பிரம்மாண்ட பேரணியாக மாநகரத் தோழர்கள், செந்தொண்டர்கள் ,தொழிற்சங்கத் தொழிலாளர் தோழர்கள் பேரணியாக சென்று ஓசூர் ராம் நகரில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

பின்னர் பொதுக்கூட்டம் முடிந்து அகில இந்திய மாநாட்டிற்கு சென்ற ஓசூர் நகர & ஒன்றிய செந்தொண்டர்களை கட்சி அலுவலகத்தில் அழைத்து பொன்னாடை போர்த்தி, 13-வது புத்தகத் திருவிழா மலரை கொடுத்து பாராட்டி மாநகர செயலாளர் தோழர் MG.நாகேஷ் பாபு மற்றும் நகர ஒன்றிய கமிட்டி தோழர்களுடன் செம்படையினர் கௌரவப்படுத்தப்பட்டார்கள்.

ஜி.பி.மார்க்ஸ்
செய்தியாளர் ஓசூர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version