திருச்சி மாவட்ட சுமை பணி தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்ட குழு கூட்டம் திருச்சியில் நடந்தது.கூட்டத்தில் சிஐடியு மாவட்டத் தலைவர் ரெங்கராஜன்,தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக பொதுத் தொழிலாளர் சங்கம் ராசப்பன்,சுவைப்பணி மாவட்ட செயலாளர் சிவக்குமார்,மண்டலச் செயலாளர் தீனதயாளன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கட்டத்தில்
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் 24 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் இன்டேன் எரிவாயு ஊழியர்களுக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் வழங்கக்கூடிய சிலிண்டர் ஒன்றுக்கு கூலியாக ரூ 33.40 வழங்க வேண்டும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக ஊழியருக்கு இணையான சலுகைகள் வழங்க வேண்டும், திருச்சி தொழிலாளர் துணை ஆணையர் (சமரசம்) உத்தரவின்படி பணி நிரந்தரம் செய்யவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 29-ந் தேதி எதிர்வரும் காலை 10 மணியளவில் திருச்சிமண்டல மேலாளருக்கு மனு கொடுத்து,நீதிமன்றம் அருகிலுள்ள மண்டலமேலாளர் அலுவலகத்தில்
காத்திருக்கும் போராட்டம் நடத்துவது என்ன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இந்த போராட்டத்தில்
சிலிண்டர் விநியோகிக்கும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக பொதுத் தொழிலாளர் சங்கம் (சி ஐ டி யு) மற்றும் மாவட்ட சுமைப்பணி ( சிஐடியு) தொழிலாளர்கள் கலந்து கொள்கிறார்கள்.