திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைப்படி தமிழ்நாட்டையும், தமிழ்த்தாய் வாழ்த்தையும் தொடர்ந்து அவமானப்படுத்தி வருவதாக தமிழ்நாடு ஆளுநரைக் கண்டித்தும், ஒன்றிய அரசின் ஏஜெண்ட்டாக தமிழ்நாட்டின் உரிமைகளில் அத்துமீறல்களை ஆளுநர் தொடர்ந்து செய்வதாகவும் ஒன்றிய அரசின் மீதுள்ள தமிழ்நாட்டு மக்களின் கோபத்தை திசைமாற்றவும் அதிமுக – பாஜக கள்ளக் கூட்டணி வைத்துள்ளதாக கூறி ஆளுநரை கண்டித்து கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக சார்பாக கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள பேரறிஞர் அண்ணா சிலை முன்பு கிழக்கு மாவட்ட அவைத்தலைவர் திரு.T.A.நாகராஜ் அவர்கள் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்தை சேர்ந்த மாநில, மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், அனைத்து அணிகளின் நிர்வாகிகள், கிளை கழகச் செயலாளர்கள், வாக்குச்சாவடி முகவர்கள்,கழக தோழர்கள் என அனைவரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினார்கள்.
M.நந்தகுமார்
கிருஷ்ணகிரி செய்தியாளர்