திருச்சி. 4.8.2025 இந்தியன் ஆர்த்தோ பியாடிக் அஸோஸியன் பத்திக்கையாளர் சந்திப்பு ஃ அறுபது வயதிற்கு மேற்பட்டோர்க்கு மருத்துவ சிசிக்கைக்கான கட்டண சலுகை பற்றி கூறப்பட்டது.60வது வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் ஆர்த்தோ நோயாளிகளுக்கு , திருச்சியில் உள்ள மருத்துவ மனைகளுக்கு ஆர்த்தோ அஸோஸியன் மூலமாக நேரடி சென்று, அவர்கள் நோயின் தன்மைக்கு ஏற்ப என்ன நோய் என கண்டறிந்து, நோயாளிகளுக்கு எங்களால் எவ்வளவு குறைந்த கட்டணத்தில் மிக நேர்த்தியான மருத்துவ சிசிக்கை தருவதாகவும் தெரிவித்தனர். ஆர்த்தோ சம்மந்தப்பட்ட நோயான முடநீக்கியல் , எலும்பு தேய்மானம். போன்ற இதர நோய்களுக்கும், உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, அதிகாலை சூரிய ஒளியால் கிடைக்கும் விட்டமின், போன்ற ஆலோசனைகளும் வயது முதிர்ந்தோர்க்கு நோய் வந்தாலும், வருவதற்கு முன்னும் என்ன செய்ய வேண்டும் என்றும் தெளிவு படுத்தினர். பெண்களுக்கும் , வயதான வர்களுக்கும் எலும்பில் எவ்வளவு சத்து இருக்கிறது, அல்லது சத்து குறைவு இருக்கிறது என வீடுதோரும் சென்று வரும் வாரம் சிகிச்சை தருவதாக கூறினர். புகைபிடித்தல், மற்றும் மது அருந்துவதால் ஏற்படும் எலும்பில் ஏற்படும் நோயை கண்டறிந்து நடைபயிற்சி மற்றும் சிறப்பு நிகழ்ச்சியாக |”ஓல்டு இஸ் கோல்டு” என கட்டண சலுகையில் செய்வதாகவும் கூறினர். மருத்துவ சிகிச்சைக்கும் ஆகும் செலவு பன்மடங்காக உயர்ந்து விட்ட காரணத்தால் அரசு திட்டங்களில் ஆர்த்தோ சிகிச்சைக்கும் முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தில் இணைக்க வேண்டும். புரத சத்துள்ள உணவுகளையும், விட்டமின் D. அதிகமுள்ள உணவுகளை சாப்பிடவும், சூரிய ஒளி உடலில் படுமாறு தினமும் நான்கு முதல் ஐந்து மணிநேரம், மற்றும் உடற்பயிற்சியின் முக்கியதுவத்தையும், உணர்ந்து தங்களது குடும்பத்தில் சிறுவர்கள், சிறுமிகளுக்கும், முதியோர்க்கும் சத்தாள.. உணவுகளையும், நடை பயிற்சியும், தர வேண்டும் என்றும் கூறப்பட்டது. ஒவ்வொரு குடும்பத்தில் உள்ள நபர்களும் முறையான மருத்துவ ஆய்வு செய்து நோய் வரும் முன் காப்போம். என பொது மக்களுக்கு பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெர்வித்தார்.