Friday, March 14, 2025
No menu items!
HomeUncategorizedஅறிவியல் ஆசிரியருக்கு மதிப்புறு முனைவர் விருது

அறிவியல் ஆசிரியருக்கு மதிப்புறு முனைவர் விருது

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஜாகிர் வெங்கடாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் அறிவியல் பட்டதாரி ஆசிரியராகப் பணிபுரியும் நீ.சங்கர் அவர்களுக்கு அவருடைய கல்விப் பணியை பாராட்டியும், சமூக சேவை, சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு மற்றும் சாதனைகளைப் பாராட்டியும் புதுச்சேரியை சேர்ந்த ஆல் இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் மற்றும் செ.வெ.ரெக்கார்ட் ஹோல்டர் ஃபோரம் , மதிப்புறு முனைவர் விருதை வழங்கியது.


இந்நிறுவனத்தின் தலைவரும் உலக சாதனையாளருமான செ.வெங்கடேசன் மற்றும் துணைத் தலைவர் சி.கலைவாணி, இருவரும் மதிப்புறு முனைவர் விருதினை ஆசிரியர் சங்கருக்கு, அவர்கள் இல்லம் தேடி வந்து நேரில் வழங்கி சிறப்பித்தார்கள்.
விருது பெற்ற ஆசிரியர் சங்கரை பள்ளி தலைமையாசிரியரும் இதர ஆசிரியர்கள் மற்றும் கல்வித் துறை அதிகாரிகள் பாராட்டினர்.

M. நந்தகுமார்
செய்தியாளர் கிருஷ்ணகிரி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version