Sunday, February 1, 2026
No menu items!
HomeUncategorizedஅரியலூர் இரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் ஏறிய பெண் உயிரை காப்பாற்றிய இரயில்வே காவலர்!

அரியலூர் இரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் ஏறிய பெண் உயிரை காப்பாற்றிய இரயில்வே காவலர்!

அரியலூர் இரயில் நிலையத்திற்கு இன்று 29.01.26 காலை விழுப்புரத்தில் இருந்து திருச்சி செல்லும் பயணிகள் ரயில், வழக்கம் போல் வந்து சேர்ந்தது. பயணிகளை இறக்கி விட்டு திருச்சி மார்க்கமாக செல்லும் பயணிகளை ஏற்றிக்கொண்டு நிலைய சிக்னல் மற்றும் கொடி அசைவுக்கு பிறகு இரயில் புறப்படத்தொடங்கிய சில விநாடிகளுக்கு பிறகு …

பெண் பயணி ஒருவர் ஏற முயன்ற போது சற்று நிலைதடுமாறி கால் தவறி கீழே விழும் நிலைக்குச் சென்றார். இதை கவனித்த பணியில் இருந்த ரயில்வே காவலர் செந்தில்குமார் மின்னல் வேகத்தில் செயல்பட்டு அப்பெண் பயணியை காப்பாற்றி இரயிலில் ஏற்றி அனுப்பினார். சில நொடி அலட்சித்தால் பாதிப்படைய இருந்த பயணியை காவலர் காப்பாற்றி சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எம்.எஸ்.மதுக்குமார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version