மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் குறுவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் ஆகஸ்ட் 20 ஆம் தேதி ஸ்ரீகண்டபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி சார்பில் மயிலாடுதுறை சாய் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. குத்தாலம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பள்ளிகளில் இருந்து சுமார் 300 மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர். குத்தாலம் குறுவட்ட செயலர் தலைமை ஆசிரியர் முருகானந்தம் வரவேற்புரை வழங்கினார். முதன்மை கல்வி அலுவலர் ஜெகநாதன் போட்டியினை துவக்கி வைத்து தலைமை தாங்கினார். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் உமாநாத் முன்னிலை வகித்தார். விளையாட்டுப் போட்டிகளை பட்டதாரி ஆசிரியர் வடிவேலன் உள்ளிட்டோர் ஒருங்கிணைத்து நடத்தினர். வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு இந்திய பள்ளி விளையாட்டுகள் கூட்டமைப்பின் மாநில கராத்தே அணி மேலாளர் கதிரவன் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார். குத்தாலம் குறுவட்ட இணை செயலர் உடற்கல்வி ஆசிரியர் கார்த்திகேயன் நன்றியுரை வழங்கினார்.
மயிலாடுதுறை மாவட்டத்திலிருந்து
அ. இன்பராஜ்
அரசியல் டைம்ஸ்