Wednesday, February 5, 2025
No menu items!
HomeUncategorizedவட்டாட்சியர் பேச்சுவார்த்தை காரணமாக தொடர் காத்திருப்பு போராட்டம் தற்காலிக நிறுத்தம்

வட்டாட்சியர் பேச்சுவார்த்தை காரணமாக தொடர் காத்திருப்பு போராட்டம் தற்காலிக நிறுத்தம்

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அஞ்செட்டி வட்டக் குழு செங்கொடிபுரம் தலித் மக்களுக்கு அரசு வழங்கிய பட்டாவின் அடிப்படையில் நிலம் ஒப்படை செய்திட கோரியும்,வீட்டு மனை பட்டா கேட்டு மனு கொடுத்து காத்திருக்கும் அனைவருக்கும் பட்டா வழங்கிட கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் காத்திருப்பு போராட்டம். அஞ்செட்டி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு 30.12.2024 அன்று நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி வட்டம் நாற்றம்பாளையம் ஊராட்சி செங்கொடிபுரம் கிராமத்தில் 1999 ஆம் ஆண்டு ஆதிதிராவிடர் நலத்துறை மூலமாக 29 பயனாளிகளுக்கு தமிழக அரசு சார்பில் வீட்டுமனை சர்வே எண்.155/3B,155/4B,155/4C என்ற நிலத்தை வீட்டுமனைப்பட்டா வழங்கப்பட்டதின் அடிப்படையில் நிலம் அளவீடு செய்து ஒப்படை
ஒப்படை செய்திட வேண்டுமெனக்கோரி வீட்டுமனை பட்டா கேட்டு மனு கொடுத்து காத்திருக்கும் அனைவருக்கும் வீட்டு மனை பட்டா வழங்கிட கோரியும் கடந்த அக்டோபர் 4ஆம் தேதி அஞ்செட்டி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பெருந்திரள் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.

அப்போது அஞ்செட்டி வட்டாட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இரண்டு மாத காலத்திற்குள் செங்கொடிபுரம் மக்களுக்கும் அத்திமரத்துர், சித்தாண்டபுரம், பூஞ்சோலை,காமராஜபுரம், பையில்காடு ஆண்டியூர் ஆகிய கிராம மக்களுக்கு பட்டா வழங்குவதாக உறுதியளித்தனர் ஆனால் மூன்று மாத காலம் ஆகியும் இதுவரை எந்த பணிகளும் துவங்கப்படாமல் உள்ளனர் எனவே வருவாய்த்துறை உடனடியாக மேற்கண்ட கிராம மக்களுக்கு வீட்டு மனை பட்டாவை வழங்கிட வேண்டும் என கோரி அஞ்செட்டி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் நடைபெற்ற காத்திருப்பு போராட்டத்தில் அஞ்செட்டி வட்டாட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது பேச்சு வார்த்தையில் செங்கொடிபுரம் கிராமத்திற்கு திராவிடர் நலத்துறை மூலம் அரசு வழங்கிய பட்டாவின் அடிப்படையில் 2025 ஜனவரி 08.தேதி நிலம் அளவீடு செய்து ஒப்படைப்பதாகவும் அத்திமரத்துர், சித்தாந்தபுரம், பூஞ்சோலை காமராஜபுரம், பயில்காடு, மிதிதிக்கி, ஓதிபுரம், ஆகிய கிராம மக்களுக்கு மாவட்ட ஆட்சியரின் பரிந்துரை பெற்று கள ஆய்வு செய்து தகுதியுடைய அனைவருக்கும் பட்டா வழங்குவதாக அஞ்செட்டி வட்டாட்சியர் உறுதிப்பட தெரிவித்தார் அதன் அடிப்படையில் போராட்டம் தற்காலிகமாக திரும்பப்பட்டது.
தலைமை:
C.குமாரவடிவேல்
வட்டச் செயலாளர்.
முன்னிலை:
P.கோவிந்தசாமி
வட்டத் தலைவர்
விளக்கவுரை :
P.பபெருமாள்.
மாநில செயலாளர்
C.பிரகாஷ்
மாவட்ட செயலாளர்
M.முருகேஷ்
மாவட்டத் தலைவர்
M.M. ராஜூ
மாவட்டப் பொருளாளர்
N.அனுமப்பா
மாவட்ட செயலாளர்
அடிமனை பயனாளிகள் சங்கம்
P.தேவராஜன்
மாவட்டக் குழு
C.செல்வம்
வட்டச் செயலாளர்
நவீன்
வட்டத் தலைவர்
வட்டக் குழு உறுப்பினர்கள் முன்னணி தோழர்கள்
D.மாரப்பா,
S.குண்டன்,
S.நெடுமாது,
S.சிவக்குமார்
G.மாதையன்,
R.சின்னசாமி,
துரைவதி,
O.R.கிருஷ்ணன்,
R.கிருஷ்ணன்
D.முனிராஜ்,
V.கோவிந்தன்,
P.அம்மாசிகவுண்டர்
V.மாதப்பன்,
M.நாராயணன்,
M.மாதன்,
B.வசுவராஜ்
ஆகிய தோழர்களும் கிராம மக்களும் பெரும் திரளாக பங்கேற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version