பாட்டாளி மக்கள் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ம.க ஸ்டாலின் மீது சற்று முன்பு அவர் ஆடுதுறை பேரூராட்சி அலுவலகத்தில் இருந்தபோது அடையாளம் தெரியாத நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசி அவரை கொலை செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.ஆனால் பெட்ரோல் குண்டு வீசியதில் அவர் உயிர் தப்பினார் அவருக்கு அருகாமையில் இருந்த இருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே பலமுறை அவரை கொலை செய்ய திட்டமிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.