Wednesday, February 5, 2025
No menu items!
HomeUncategorizedமறைந்தார் பொருளாதார சிற்பி-7 நாட்கள் துக்கம் அனுசரிப்பு

மறைந்தார் பொருளாதார சிற்பி-7 நாட்கள் துக்கம் அனுசரிப்பு

முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்கள் (92 வயது) வயது மூப்பு மற்றும் உடல் நல குறைவு காரணமாக காலமானார். மன்மோகன் சிங் அவர்கள் வயது மூப்பு காரணமாக சில மாதங்களாக தனது வீட்டில் ஓய்வில் இருந்த நிலையில், அவ்வப்போது மருத்துவமனைகளுக்கு சென்று உடல் நலனை பேணி வந்தார். இந்த நிலையில் வியாழக்கிழமை
26/12 /2024 இரவு 8 மணி அளவில் அவர் உடல் நல குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் அனைத்து வகையான சிகிச்சைகளும் அளித்த நிலையில் இரவு 9:51 மணியளவில் மன்மோகன் சிங் அவர்களது உயிர் பிரிந்ததாக எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களது மறைவிற்கு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், தமிழக முதல்வர், அமெரிக்க வெள்ளை மாளிகை மற்றும் அனைத்து அரசு கட்சி தலைவர்களும் பொது மக்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது மறைவினை ஒட்டி இந்தியா முழுவதும் ஏழு நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. இந்தியா முழுவதும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களின் மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே இந்தியா முழுவதும் அடுத்த ஏழு நாட்களுக்கு நடைபெற இருந்த அனைத்து அரசு நிகழ்வுகளும் போராட்டங்களும் ரத்து செய்யப்படுகிறது. அவரது இறுதி ஊர்வலம் 28 சனிக்கிழமை நடைபெற உள்ளதாக குடும்பத்தினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் :
இந்தியாவின் முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்கள் காலமானது வெட்டி தமிழக முதல்வர் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் வியாழக்கிழமை டெல்லி புறப்பட்டு அவருக்கு நெல் அஞ்சலி செலுத்த போவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதுமட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் அடுத்த ஏழு நாட்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படுவதாகவும் இன்று முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை மன்மோகன் சிங் அவர்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அ. காவியன்
செய்தியாளர

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version