பகுத்தறிவு பகலவன், தெற்காசியாவின் சாக்ரடீஸ்தந்தை, வைக்கம் வீரர், திராவிட கழகத்தின் நிறுவனர், தந்தை பெரியாரின் 146 வது பிறந்த நாள் விழாவையொட்டி மயிலாடுதுறையில் பேரணி நடைபெற்றது.
இந்தப் பேரணி மயிலாடுதுறை தலைமை தபால் நிலையத்தில் இருந்து கேணி கரையில் உள்ள பெரியார் சிலை வரை நடைபெற்றது. பேரணியில் பெரியாரின் சிறப்பு மற்றும் மத்திய அரசு எதிர்ப்பு பற்றியும் கோஷமிட்டனர். மயிலாடுதுறை திராவிடர் கழகத்தின் முக்கிய தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் இப்பேரணியில் கலந்து கொண்டனர்.
மயிலாடுதுறை செய்தியாளர் – பிரவீன் குமார்