பேரறிஞர் அண்ணாவின் 116வது பிறந்த விழாவை முன்னிட்டு திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் சிந்தாமணி அருகே உள்ள அவரது திருவுருவ சிலைக்கு கழக முதன்மை செயலாளரும் நகராட்சி நிருவாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு அவர்களின் வழிகாட்டுதலின் படி, திருச்சி மத்திய மாவட்ட திமுக செயலாளர்
வைரமணி தலைமையில் மாநகர செயலாளர் மாநகர மேயர் அன்பழகன் முன்னிலையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதனைத்தொடர்ந்து திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் உள்ள பேரறிஞர் அண்ணா மற்றும் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் திருஉருவ சிலைக்கு திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்…
இந்த நிகழ்வில் சேர்மன் துரைராஜ்,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் பெரியசாமி உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்..