HomeUncategorizedபாபநாசம் அருகே விவசாயத்திற்கு பயன்படும் 10 க்கும் மேற்பட்ட பம்பு செட்டுகளில் ஒயர் திருட்டு…

பாபநாசம் அருகே விவசாயத்திற்கு பயன்படும் 10 க்கும் மேற்பட்ட பம்பு செட்டுகளில் ஒயர் திருட்டு…

காவல்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை……

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா திருவைக்காவூர் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல் சாகுபடி விவசாயிகள் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் திருவைக்காவூர் எடக்குடி அனுமாநல்லூர் உள்ளிட்ட பகுதியில் பத்திற்கு மேற்பட்ட விவசாயிகளின் விவசாய பயன்பாட்டிற்கு பயன்படும் மோட்டார் பம்பு செட்டுகளில் உள்ள காப்பர் ஒயர்களை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளதாகவும், அதுமட்டுமல்லாமல் மின் கம்பத்திலிருந்து மோட்டருக்கு மின் இணைப்பு வழங்கக்கூடிய ஒயர்களையும் திருடி சென்றுள்ளதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

அது மட்டுமல்லாமல் பல மாதங்களாக மோட்டார் பம்பு செட்டுகளில் உள்ள ஒயர்களை மர்ம நபர்கள் திருடி செல்வதாக பலமுறை காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே உடனடியாக மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டு விவசாயிகளின் நலன் கருதி பம்பு செட்டுகளில் உள்ள ஒயர்களை திருடிச் செல்லும் மர்ம நபர்களை காவல்துறையினர் கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here