Sunday, June 28, 2026
No menu items!
HomeUncategorizedபழுதான பாலத்தைபயத்துடன் கடக்கும் பொதுமக்கள் நீண்டகால கோரிக்கைக்கு தீர்வு எப்போது?

பழுதான பாலத்தைபயத்துடன் கடக்கும் பொதுமக்கள் நீண்டகால கோரிக்கைக்கு தீர்வு எப்போது?

அரியலூர் மாவட்டம் ஸ்ரீபுரத்தான் எல்லையில் அமைந்துள்ள ஆற்றுபாலம் ஒன்று சுமார் பத்தாண்டுகளுக்கு முன்பு பழுதடைந்து உள்வாங்கிவிட்டதாகவும் நீண்டகாலமாக சம்பந்தப்பட்டதுறை, மாவட்ட நிர்வாகம் மற்றும் அரசியல்வாதிகளிடம் கோரிக்கை வைத்தும் இதுவரை எந்த பலனும் இல்லையென்று வேதனைதெரிவிக்கின்றனர். மேலும்

ஸ்ரீபுரத்தான் அரங்கோட்டை சுற்றுவட்டீர பொதுமக்கள் பொண்ணாற்றை கடக்க இப்பாலத்தையே நம்பியுள்ளதாகவும் இதன் அருகில் உள்ள முனியனார் கோவிலுக்கு பெருமளவில் பக்தர்கள் வந்து போவதாகவும் இதையெல்லாம் கருத்தில் கொண்டு சேதமடைந்துள்ள வெள்ளைகாரன் காலத்து பாலத்தை அகற்றிவிட்டு புதியபாலம் அமைக்க மாவட்ட நிர்வாகம்

முன்வரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கையும் வைத்துள்ளனர். மழைக்காலம் தொடங்கும் நிலையில் பொதுமக்களின் நலன் கருதி விரைவான நடவடிக்கை மேற்கொண்டால் மக்கள் நிம்மதியடைவார்கள்.

எம்.எஸ்.மதுக்குமார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version