திருச்சி மாநகராட்சி பஞ்சபூரில்
சீர்மிகு நகரத்திட்டம்
9.6 மெகாவாட் தரைமட்ட சூரிய ஒளி மின்உற்பத்தி நிலையத்தை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே. என். நேரு திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார், மேயர் அன்பழகன், ஆணையர் சரவணன், முசிறி சட்டமன்ற உறுப்பினர் தியாகராஜன் மற்றும் மண்டல தலைவர்கள், மாநகராட்சி உயர் அலுவலர்கள்,
மத்திய மாவட்ட செயலாளர். வைரமணி,
முன்னாள் மத்திய மாவட்ட திமுக துணைச் செயலாளர் குடமுருட்டி சேகர்,மாவட்டத் துணைச் செயலாளர் கவுன்சிலர் முத்துச்செல்வம்,
மண்டல குழு தலைவர்கள் விஜயலட்சுமி கண்ணன், துர்காதேவி,பகுதிச் செயலாளர்கள் நாகராஜன், கமால் முஸ்தபா, மோகன்தாஸ்,காஜாமலை விஜய்,ஒன்றிய செயலாளர்கள் மாத்தூர் கருப்பையா, அந்தநல்லூர் கதிர்வேல்,மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் கிராப்பட்டி செல்வம், புத்தூர் தர்மராஜ், தொழிலதிபர் ஜான்சன் குமார்,மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் பி.ஆர் சிங்காரம்,மாநகர அயலக அணி அமைப்பாளர் துபேல் அகமது,மாநகர துணை செயலாளர் கவுன்சிலர் கலைச்செல்வி,
நிர்வாகிகள் புத்தூர் பவுல்ராஜ் வாமடம் சுரேஷ் அரவானூர் தர்மராஜன், பி.ஆர். பாலசுப்பிரமணியன், தனசேகர்,மாவட்ட பிரதிநிதி வக்கீல் மணிவண்ண பாரதி,கவுன்சிலர்கள் ராமதாஸ், புஷ்பராஜ்,கவிதா செல்வம், மஞ்சுளா பாலசுப்பிரமணியன்,நிர்வாகிகள் சர்ச்சில்,இன்ஜினியர் நித்தியானந்த்,மார்சிங் பேட்டை செல்வராஜ்,ரியல் எஸ்டேட் நடராஜன்,கருமண்டபம் கதிரேசன்,தொமுச குணசேகரன், மின்வாரிய தொழிற்சங்கம் பாஸ்கரன், மற்றும்
மாமன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.
இந்தசூரிய ஒளி மின் திட்டம்
சீர்மிகு நகரத்திட்டத்தின் கீழ், ரூ.50.00 கோடி மதிப்பீட்டில் பஞ்சப்பூர் பகுதியில் சுமார் 33.21 ஏக்கர் பரப்பளவில், 9.6 மெகாவாட் திறன் கொண்ட (2.4 மெகாவாட் X 4 தொகுப்புகள்) தரைமட்ட சூரிய ஒளி மின்உற்பத்தி நிலையம் அமைக்கும் பணி முடிவடைந்து தற்போது பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
திருச்சி மாநகராட்சியில் குடிநீர் விநியோகப்பணிகள், புதைவடிகால் பராமரிப்பு பணிகள், தெருவிளக்குகள், அலுவலக கட்டிடங்கள் மற்றும் இதர இனங்களுக்கான குறைந்த மின்னழுத்த மின்னிணைப்புகள் மொத்தம் 3433 எண்ணிக்கைகள் உள்ளது. இம்மின்னிணைப்புகளுக்கு ஆண்டொன்றிற்கு சராசரியாக மொத்தம் 196.93 லட்சம் யூனிட்டுகள் பயன்படுத்தப்பட்டு, ஆண்டொன்றிற்கு மின்கட்டணத் தொகை ரூ.14.08 கோடி தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு செலுத்தப்பட்டு வருகிறது.
திருச்சி மாநகராட்சியின் குடிநீரேற்று நிலையங்களில் 8 உயர்மின்னழுத்த மின்னிணைப்புகள் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தின் 10 உயர்மின்னழுத்த மின்னிணைப்புகளை சேர்த்து ஆக மொத்தம் 18 உயர்மின்னழுத்த மின்னிணைப்புகள் பயன்பாட்டில் உள்ளது. இந்த
மின்னிணைப்புகளுக்கு ஆண்டொன்றிற்கு சராசரியாக மொத்தம் 295.43 இலட்சம் யூனிட்டுகள் பயன்படுத்தப்பட்டு ஆண்டொன்றிற்கு மின்கட்டணத் தொகை ரூ.21.12 கோடி தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு செலுத்தப்பட்டு வருகிறது.
மாநகராட்சியின் மொத்த மின்பயனீட்டு அளவு ஆண்டொன்றிற்கு 492.36 லட்சம் யூனிட்டுகள், மாநகராட்சியின் மொத்த மின்கட்டணம் ஆண்டொன்றிற்கு ரூ.35.20 கோடி ஆகும்.
இந்த மின் நிலையத்தில் சூரிய ஒளி மின்உற்பத்தி தகடுகள் மொத்தம் 29328 எண்ணிக்கைகள் பொருத்தப்பட்டுள்ளதில், இதன் மூலம் நாளொன்றுக்கு 43000 யூனிட் மின்சாரம் வீதம், ஆண்டுக்கு 159.78 லட்சம் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு, எடமலைப்பட்டிபுதூர் துணை மின் நிலையத்துடன் பகிரப்பட உள்ளது.