Friday, June 5, 2026
No menu items!
HomeUncategorizedதுறையூர் சார்-பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை: ₹30,000 பறிமுதல்!

துறையூர் சார்-பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை: ₹30,000 பறிமுதல்!

திருச்சி மாவட்டம், துறையூரில் செயல்பட்டு வரும் சார்-பதிவாளர் பத்திரபதிவு அலுவலகத்தில் இன்று திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி மணிகண்டன் தலைமையில் போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டபோது கணக்கில் வராத பணம் ரூ 30 ஆயிரத்தை பறிமுதல் செய்துள்ளனர்.

துறையூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ரியல் எஸ்டேட் தொழில் வேகமாக நடைபெற்று வரும் நிலையில், பத்திரப்பதிவு பணிகளுக்காக நிலத்தரகர்கள் மற்றும் ரியல் எஸ்டேட் தொழிலதிபர்களிடம் அளவுக்கு அதிகமாக லஞ்சம் பெறப்படுவதாக புகார்கள் எழுந்திருந்ததாக கூறப்படுகிறது. இந்தபுகார்களின் அடிப்படையில் திருச்சி லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவு துணை கண்காணிப்பாளர் மணிகண்டன் தலைமையில் 7 பேர் கொண்ட குழுவினர்கள் போலீசார் நேற்று மாலை மதியம் 4 மணி அளவில் திடீரென துறையூர் சார்-பதிவாளர் அலுவலகத்தில் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அலுவலக ஆவணங்கள், கணினி பதிவுகள் மற்றும் பணப் பரிவர்த்தனை தொடர்பான பல்வேறு விவரங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதில் கணக்கில் வராத பணம் ரூ 30 ஆயிரத்தை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கைப்பற்றியுள்ளனர். துறையூர் சார்-பதிவாளரான மகாராஜன் பொறுப்பேற்ற நிலையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பாக காணப்பட்டது. நேற்று மதியம் தொடங்கிய லஞ்ச ஒழிப்பு போலீசாரின் சோதனை இரவு 10 மணிக்கு மேல் நிறைவு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது…

செய்தியாளர்; ரூபன்ராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version