திருச்சி அருகே இன்று காலை நடந்த விபத்தில் கார் மோதி 9 மாத கர்ப்பிணி போலீஸ் பரிதாபமாக உயிரிழந்தார் .உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி அருகே இன்று காலை நடந்த இந்த விபத்து பற்றிய விவரம் வருமாறு:-
புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் பள்ளத்துபட்டியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி விமலா.
மண்டையூர் போலீஸ் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்தார். இவர் தற்போது 9 மாத கர்ப்பிணியாக இருந்தார். இன்று காலை அவர் திருச்சி – புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் கீரனூர் சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்றபோது அவர் மீது கார் மோதியது. இதில் விமலா இறந்தார். அவரது உடல் திருச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைககப்பட்டது. இது குறித்து மண்டையூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இது தொடர்பாக புதுக்கோட்டை நிஜாம் காலனியை சேர்ந்த கார் டிரைவர் வெனின்ராஜ் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.