HomeUncategorizedதமிழகத்தின் இரண்டாவது தலைநகரம் ஆகிறதா திருச்சி..!?

தமிழகத்தின் இரண்டாவது தலைநகரம் ஆகிறதா திருச்சி..!?

தமிழகத்தின் இரண்டாவது தலைநகராக திருச்சி அறிவிக்கப்பட உள்ளதாகவும் விரைவில் முதல்வர் விஜய் அதற்கான அறிவிப்பை வெளியிட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தின் தலைநகராக சென்னை விளங்கி வருகிறது தமிழகச் செயலகம் முக்கிய அரசு அலுவலகங்கள் பல்வேறு துறைகளில் தலைமையங்கள் உள்ளிட்ட நிர்வாக கட்டமைப்புகள் சென்னையில் அமைந்துள்ளன. இதனால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து அரசு அலுவல் தொடர்பாக சென்னைக்கு வர வேண்டிய நிலை உள்ளன.
இந்த சூழலில் தமிழகத்தின் மத்திய பகுதியில் அமைந்துள்ள திருச்சியை இரண்டாவது தலைநகராக உருவாக்கினால் அரசு நிர்வாகத்தை பரவலாக்க முடியும் என்ற கருத்தை நீண்ட காலமாக முன்வைக்கப்பட்டு வருகிறது.
திருச்சி இரண்டாவது தலைநகரமாக மாற்ற வேண்டுமென்ற கோரிக்கையை தமிழக அரசியலில் பல ஆண்டுகளாக விவாதிக்கப்பட்டு வருகிறது முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் ஆட்சிக் காலத்திலும் இந்த கருத்து பேசப்பட்டு வருகிறது. தமிழகத்தின் மத்திய பகுதியில் அமைந்துள்ள திருச்சி சாலை ரயில் மற்றும் விமான போக்குவரத்து வசதிகளை கொண்ட முக்கிய நகரமான விளங்குகிறது.
கல்வி தொழில் வர்த்தகம் மற்றும் சுற்றுலாத் துறைகளிலும் திருச்சி குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றுள்ளது. திருச்சியை நிர்வாக மையமாக மையப்படுத்தினால் மத்திய மற்றும் தென் தமிழக மாவட்டங்களை சேர்ந்த மக்கள் சில அரசு சேவைகளை பெறுவதற்காக சென்னைக்கு செல்ல வேண்டிய அவசியம் குறையக்கூடும்.
இந்நிலையில் விரைவில் தமிழகத்தின் இரண்டாவது தலைநகராக திருச்சி அறிவிக்க முதல்வர் விஜய் திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

செய்தியாளர் ; ரூபன்ராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here